தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நுரையீரலில் உள்ள கபத்தை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? மழைக்காலம் முழுவதும் இந்த ஒரு பானம்!

நுரையீரலில் உள்ள கபத்தை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? மழைக்காலம் முழுவதும் இந்த ஒரு பானம்!

Priyadarshini R HT Tamil

Nov 05, 2024, 01:41 PM IST

google News
நுரையீரலில் உள்ள கபத்தை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? மழைக்காலம் முழுவதும் இந்த ஒரு பானமத்தை பருகி பலன்பெறுங்கள்.
நுரையீரலில் உள்ள கபத்தை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? மழைக்காலம் முழுவதும் இந்த ஒரு பானமத்தை பருகி பலன்பெறுங்கள்.

நுரையீரலில் உள்ள கபத்தை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? மழைக்காலம் முழுவதும் இந்த ஒரு பானமத்தை பருகி பலன்பெறுங்கள்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நுரையிரலில் உள்ள கபத்தை கரைத்து வெளியேற்ற நீங்கள் தினமும் இந்த பானத்தை காலையில் பருகவேண்டும். இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். சளியையும் அடித்து விரட்டும். இது இந்த மழைக்காலத்துக்கு உங்களையும் கட்டாயம் சளித்தொல்லையில் இருந்து காக்கும். குளிருக்கு இதமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

மிளகுத்தூள் – இரண்டு சிட்டிகை

இஞ்சித்துண்டு – சிறியது

பெரிய நெல்லிக்காய் – பாதி

அல்லது

எலுமிச்சைச் சாறு – 4 டேபிள் ஸ்பூன்

துளசி – ஒரு கைப்பிடியளவு

ஓமவல்லி இலை – ஒரு கைப்பிடியளவு

தண்ணீர் – ஒரு டம்ளர்

தேன் - தேவையான அளவு

செய்முறை

மஞ்சள் தூள், மிளகுத்தூள், இஞ்சித்துண்டு, பெரிய நெல்லிக்காய் அல்லது எலுமிச்சைச் சாறு, துளசி, ஓமவல்லி என அனைத்தையும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடித்து பருகவேண்டும். தேன் கலந்து பருகவேண்டும்.

தேன் தேவைப்பட்டாலும் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். இதை தினமும் காலையில் நீங்கள் பருகவேண்டும். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மேலும் உங்கள் நுரையீரலில் உள்ள கபத்தை கரைத்து அப்படியே வெளியேற்றும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி