அடித்துப் பெய்யும் மழையிலும் அசந்துவிடாத நோய் எதிர்ப்பாற்றல் வேண்டுமா? இதோ வாரம் ஒருமுறை இந்த பானம்!
Oct 19, 2024, 01:03 PM IST
மழைக்காலம் துவங்கிவிட்டது. அடித்துப் பெய்யும் மழையிலும் அசந்துவிடாத நோய் எதிர்ப்பாற்றல் வேண்டுமா? இதோ வாரம் ஒருமுறை இந்த பானம் மட்டும் பருகுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மழைக்காலம் துவங்கிவிட்டாலே சளி, இருமல் தொல்லைகள், காய்ச்சல், பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் என எண்ணற்ற வியாதிகள் நம்மை படாய்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, அஜீரணம், செரிமானக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு உபாதைகளும் ஏற்பட்டு உங்களை தொல்லைப்படுத்தும். இவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளவும், உங்கள் உடலின் பாதுகாப்பு கவசமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உங்களுக்கு ஒரு பானம் உதவும். இதை வாரம் ஒருமுறை கட்டாயம் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் இதை தயாரிப்பதும் எளிது. இதை தயாரிக்க வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே போதுமானது. இதை எப்படி செய்வது என்று பாருங்கள். வீட்டில் உள்ள சிறுவர்கள் கட்டாயம் பருகவேண்டிய அந்த பானம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 2
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு (தோல் நீக்கி தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். அதில் வெற்றிலைகளை காம்பு கிள்ளி சிறு துண்டுகளாக்கி சேர்க்கவேண்டும். அடுத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். நன்றாக 5 நிமிடங்கள் இது கொதிக்க வேண்டும்.
இதை அரை டம்ளர் உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து பருகவேண்டும். இதை பருகுவதால் சளி, இருமல், காய்ச்சல், செரிமான கோளாறுகள், வாயுத்தொல்லை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை சரிசெய்கிறது. மழைக்காலத்தில் இவை இல்லாமல் இருந்தாலே பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம். எனவே உங்கள் ஆரோக்கியம் காக்க நீங்கள் இதை எடுத்துக்கொள்வதை கட்டாயமாக்கவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற வித்யாசமான ரெசிபிக்கள், பாரம்பரிய ரெசிபிக்கள் உள்ளிட்ட பல்வேறு ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் எண்ணற்ற தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே இவற்றை தெரிந்துகொள்ள நீங்கள் எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். படித்து பலன்பெறுங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்