தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vepampoo Mango Pachadi : சீசன்தான் வந்தாச்சு அப்புறம் என்ன? செஞ்சுடவேண்டிதன் மாங்காய் வேப்பம்பூபச்சடி!

Vepampoo Mango Pachadi : சீசன்தான் வந்தாச்சு அப்புறம் என்ன? செஞ்சுடவேண்டிதன் மாங்காய் வேப்பம்பூபச்சடி!

Priyadarshini R HT Tamil

Apr 22, 2024, 10:06 AM IST

google News
Vepampoo Mango Pachadi : மாங்காய் வேப்பம்பூபச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Vepampoo Mango Pachadi : மாங்காய் வேப்பம்பூபச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Vepampoo Mango Pachadi : மாங்காய் வேப்பம்பூபச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – 1

மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த வேப்பம்பூ – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை

மாங்காயை தோல் சீவி மெலிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும் அல்லது கேரட் துருவியில் துருவிக்கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும். மாங்காய் வெந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் துருவிய வெல்லம் சேர்க்கவேஷ்டும்.

வெல்லம் கரைந்து மாங்காயுடன் சேர்ந்து கெட்டியாகி பச்சடி பதம் வந்த பின் அடுப்பை அணைத்து விடவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் சேர்க்கவேண்டும்.

அதே கடாயில் நெய்யை சேர்த்து‌ காய்ந்த வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வறுத்து பச்சடியில் கலந்து கொள்ளவேண்டும்.

இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பான சுவையில் வேப்பம்பூ மாங்காய் பச்சடி ரெடி. இது எந்த ஒரு விருந்துக்கும் ஏற்றது.

இதை இந்த சீசனில்தான் செய்ய முடியும். ஏனெனில் பசுமையான மாங்காய் மற்றும் வேப்பம்பூக்கள் இந்த சீசனில்தான் கிடைக்கும். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

மாங்காயின் நன்மைகள்

மாங்காயை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ஆனால் அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொண்டால் அது உங்களுக்கு இன்னும் பிடித்த காய் ஆகிவிடும்.

உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளில் சிலருக்கு புளிப்பு சுவையை சாப்பிட தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.

மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும். குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.

மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மாங்காய் சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

பல் பராமரிக்க உதவுகிறது. மாங்காயை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆனால் இவ்வளவு நன்மைகள் நிறைந்த மாங்காயை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடலில் சூட்டை ஏற்படுத்தும். அதனால் அதிகம் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே அளவாக எடுத்து மகிழ்வாக வாழ்வோம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி