தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mango Thokku The Season Has Arrived It Is Necessary To Change Immediately The Ultimate Taste Of Mangoes

Mango Thokku : சீசன் வந்தாச்சு; உடனே செஞ்சுட வேண்டியது தான்! உச்சுக்கொட்டும் சுவையில் மாங்காய் தொக்கு!

Priyadarshini R HT Tamil
Mar 27, 2024 07:00 AM IST

Mango Thokku : மனம் மயக்கும் மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Mango Thokku : சீசன் வந்தாச்சு; உடனே செஞ்சுட வேண்டியது தான்! உச்சுக்கொட்டும் சுவையில் மாங்காய் தொக்கு!
Mango Thokku : சீசன் வந்தாச்சு; உடனே செஞ்சுட வேண்டியது தான்! உச்சுக்கொட்டும் சுவையில் மாங்காய் தொக்கு!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

மாங்காய் – 2

வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்

நல்லெண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை

மாங்காயை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவேண்டும்.

அதில் ஒரு மாங்காயை கேரட் துருவியில் பொடியாக துருவிக் கொள்ளவேண்டும். ஒரு மாங்காயை சிப்ஸ் சீவும் கட்டையில் பெரிதாக துருவிக் கொள்ளவும்.

கடாயை லேசாக சூடாக்கி அதில் வெந்தயத்தை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்து ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

ஒரு கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், அதில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சீவிய மாங்காய்த்துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அவை சிறிது வதங்கியவுடன், துருவிய மாங்காயை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் எண்ணெயில் வேகவிடவேண்டும்.

மாங்காய் நன்றாக வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.

மாங்காயோடு மிளகாய்த்தூள் கலந்ததும், வெல்லம் சேர்த்து கலந்து கிளறவேண்டும். தொக்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வந்தவுடன், வறுத்து பொடித்த வெந்தயப்பொடி சேர்த்து நன்றாக கலந்து இறக்கவேண்டும்.

நன்றாக ஆறியவுடன் காய்ந்த கண்ணாடி பாட்டிலில் மாற்றிக் கொள்ளவேண்டும். இதை காற்றுப்புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஊறுகாய்களை எப்போதும் ஒரு வெள்ளை துணியில் மூடி வெயிலில் அவ்வப்போது வைத்து எடுத்தால் அது ஊறி நன்றாக இருக்கும்.

அடிக்கும் வெயிலுக்கு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சொர்கமேதான்.

மாங்காயின் நன்மைகள்

மாங்காயை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ஆனால் அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொண்டால் அது உங்களுக்கு இன்னும் பிடித்த காய் ஆகிவிடும்.

உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளில் சிலருக்கு புளிப்பு சுவையை சாப்பிட தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.

மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும். குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.

மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மாங்காய் சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

பல் பராமரிக்க உதவுகிறது. மாங்காயை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆனால் இவ்வளவு நன்மைகள் நிறைந்த மாங்காயை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடலில் சூட்டை ஏற்படுத்தும். அதனால் அதிகம் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே அளவாக எடுத்து மகிழ்வாக வாழ்வோம்.

WhatsApp channel

டாபிக்ஸ்