Useful Kitchen Hacks: சமையலில் அவசியமான கிச்சன் டிப்ஸ்கள் ! தெரிஞ்சுக்க இத படிங்க முதல்ல!
Sep 23, 2024, 11:02 AM IST
Useful Kitchen Hacks: சமையல் செய்யத் தொடங்குபவர்கள் முதல் பல வருடங்களாக சமைப்பவர்கள் வரை அனைவரும், சில சமயங்களில் தெரியாமல் பல தவறுகளை செய்தி விடுவார்கள். அவ்வாறு தெரியாமல் செய்த தவறுகளை சரி செய்யவும், தவறுகள் வராமல் பார்த்துக் கொள்வதும் சிறந்த சுவையான சமையல் செய்வதற்கு முதல் படி ஆகும்.
சரியான நேரத்திற்கு சமையல் செய்ய வேண்டும் என்ற பதட்டம் சமையலில் ஏதேனும் தவறு ஏற்பட வழி வகை செய்கிறது. சமையலும் ஒரு கலை தான். இந்த கலையை செய்யவும் திறமை தேவைப்படுகிறது. சமையல் செய்யத் தொடங்குபவர்கள் முதல் பல வருடங்களாக சமைப்பவர்கள் வரை அனைவரும், சில சமயங்களில் தெரியாமல் பல தவறுகளை செய்தி விடுவார்கள். அவ்வாறு தெரியாமல் செய்த தவறுகளை சரி செய்யவும், தவறுகள் வராமல் பார்த்துக் கொள்வதும் சிறந்த சுவையான சமையல் செய்வதற்கு முதல் படி ஆகும். சமையலில் அனைவருக்கும் தேவைப்படும் முக்கியான டிரிக்ஸ் மற்றும் டிப்ஸ்களை தெரிந்து கொள்ள இதை படியுங்கள்.
உப்பு அதிகரித்தல்
சமையலில் பெரும்பாலானோர் செய்யும் முக்கியமான தவறு என்னவென்றால் உப்பு அதிகமாக போடுவது. உப்பு குறைவாக போட்டால், மீண்டும் சரியான அளவு உப்பை போட்டு சரி செய்துக் கொள்ளலாம். ஆனால் அதிகமான உப்பை போட்டால் அந்த உணவு வீண் ஆகிவிடும். யாராலும் சாப்பிட முடியாது. எனவே அந்த உப்பு அதிகமாக போட்டு விட்டால் சில டிரிக்ஸ்களை செய்யலாம் . உதாரணத்திற்கு குழம்புகளில் அதிக அளவு உப்பு சேர்ந்து விட்டால், ஒரு முழு உருளை கிழங்கை அந்த குழம்பினுள் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இது அதிக அளவிலான உப்பை உறிஞ்சி விடுகிறது.
பொரியல் செய்யும் போது உப்பு அதிகமாகி விட்டால், அதனுள் சிறிதளவு பொரி கடலையை மாவு போல அரைத்து சேர்க்க வேண்டும். இது பொரியலில் இருக்கும் உப்பை சமன் செய்து சாப்பிடும் போது சுவையையும் கூட்டும்.
வண்டு வராமல் இருக்க
அரிசி, பருப்பு போன்றவற்றில் அடிக்கடி பூச்சி, வண்டுகள் வருவது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனை ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக தடுக்க முடியும். அரிசி, பருப்பு போன்றவற்றில் தேங்காய் ஓடுகளை போட்டு வைப்பதன் மூலம் அதில் உள்ள ஈரப்பதம் குறைக்கப்படுகிறது. இதனால் வண்டுகள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது போலவே வெள்ளைப்பூண்டின் காம்பு பகுதியை தலையுடன் சேர்த்து பிய்த்து வெயிலில் காய வைக்க வேண்டும். இதனை அரிசி பருப்புகளில் போட்டு வைக்க வேண்டும். இதுவும் பூச்சி, வண்டுகள் வராமல் தடுக்க சிறந்த வழியாகும்.
மற்ற சில குறிப்புகள்
குக்கரிலும் சாதம் உதிரியாக வருவதற்கு, அரிசியை குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனால் சாதம் நீண்ட நேரத்திற்கு இறுகாமல் உதிரியாகவே இருக்கும். மேலும் சுவையான டீ குடிக்கவும், அதிக ஸ்ட்ராங்க் ஆன டி குடிக்கவும், டீத்தூளில் சிறிதளவு காப்பி பொடியையும் 5 அல்லது 6 ஏலக்காய் துண்டுகளை உடைத்தும் போட்டு வைக்க வேண்டும். இது நாம் குடிக்கும் டீயை கூடுதல் சுவையாக்கும்.
பால் காய்ச்சும் போது பொங்கி கீழே வழியாமல் இருக்க அதன் மீது ஒரு வடிக்கட்டியை வைக்க வேண்டும். இது பொங்கி கீழே வழிவதை தடுக்க வேண்டும். மேலும் மீன் வறுவல் செய்யும் போது மசாலா நன்கு ஒட்டிக் கொள்ள மசாலாவுடன் சமையல் எண்ணெய் சேர்த்து தடவி ஊற விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது மசாலா நன்கு ஒட்டி சுவையை கூட்டும்.
டாபிக்ஸ்