Gas Trouble : இதை செய்து பாருங்கள் வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது.. தவிர்க்க வேண்டிய உணவுகள் இதுதான்!
Aug 21, 2024, 01:58 PM IST
Gas Trouble : வளரும் குழந்தைகளுக்கு இட்லி, ஸ்டீம் தோசை, ஆப்பம் தேங்காய்ப்பால், புட்டு கொண்டைக்கடலை, வாழைப்பழம், வெல்லம் இப்படி கொடுக்கலாம்.
பாஸ்ட் புட், அதிக அளவிலான ஜங்க் உணவுகள் சாப்படுவதாலும், நார்ச்சத்து குறைவாக இருக்கும் உணவுகள் சாப்பிடுவதாலும் வயிற்றில் வாயு பிரச்னை ஏற்படுகிறது.சோம்பு விதைகள் வாயு தொல்லைக்கு சிறந்த தீர்வாக உள்ளது. வயிறு உப்புசமாக உணர்ந்தாலோ, வாயு தொல்லை ஏற்பட்டாலோ சிறிதளவு சோம்பு விதைகளை மென்று சாப்பிட வேண்டும்.
காலை உணவு 9 மணிக்குள் சாப்பிட்டு விடுவது மிக மிக முக்கியம்
காலை மற்றும் மதிய உணவு, சமைத்த உணவுகளாக இருக்க வேண்டும். இரவு உணவு சமைக்காத பழ உணவுகளாக இருக்கலாம். காலை 11, மாலை 4 மணி போன்ற சமயங்களில் பழ உணவுகளை சாப்பிட்டு பாருங்கள். வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது. அதிக பசி வந்த பின்னும் சாப்பிடாமல் இருக்க கூடாது. காலை உணவு 9 மணிக்குள் சாப்பிட்டு விடுவது மிக மிக முக்கியம்.
காலை உணவில் தேங்காய்ப் பால் கலந்த உணவுகள் இருப்பது மிக மிக நல்லது. வாயுவை விரட்டிவிடும். இரவெல்லாம் தூங்கி காலை எழுந்து, உணவு சாப்பிடுகையில் உண்ணும் உணவு குளிர்ச்சியாக உணவாக இருப்பது அவசியம்.
அவல், தேங்காய்ப் பால், கைக்குத்தல் அரிசி, சிறுதானிய பொங்கல், வெண் பொங்கல் சாம்பார், இட்லி சாம்பார், நவதானிய கஞ்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.
வளரும் குழந்தைகளுக்கு
வளரும் குழந்தைகளுக்கு இட்லி, ஸ்டீம் தோசை, ஆப்பம் தேங்காய்ப்பால், புட்டு கொண்டைக்கடலை, வாழைப்பழம், வெல்லம் இப்படி கொடுக்கலாம். பெரியவர்கள் பொங்கல், சப்பாத்தி பருப்பு சப்ஜி, ஒரு கப் பழத்துண்டுகள், கேழ்வரகு உணவுகள், சிவப்பரிசி அவல், பப்பாளி சாலட் போன்ற 2-3 விதமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆம், காலை உணவு ஒரு ராஜாவை போல சாப்பிடுங்கள். அதுதான் ஆரோக்கியம்.
வாயு பிரச்னை இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பஜ்ஜி, போண்டா, சமோசா, மசாலா வடை, உருளைக்கிழங்கு, காராமணி, முட்டைக்கோஸ், கொத்தவரை, துரித உணவுகள், பீட்சா, பர்கர், பிஸ்கெட், பலாப்பழம், மாம்பழம்.
கிராம்பு வாயு தொல்லையை போக்கும்
கிராம்பிலும் வாயு தொல்லையை போக்கும் தன்மை உள்ளது. அத்துடன் செரிமான அமைப்புக்கு உதவி புரிந்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து மிக்க பழங்கள் அல்லது காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் வாயு தொல்லைக்கு உடனடி தீர்வு காணலாம்.
வாயு தொல்லை நீங்க சிலர் சோடா அருந்துவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமாக சோடா பருகினால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்