Top 8 Parenting Tips : உங்கள் குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை வரக்கூடாதா? இதோ இந்த 8 குறிப்புகள் உதவும்!-top 8 parenting tips shouldnt your babys baby teeth get infected here are 8 tips to help - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Top 8 Parenting Tips : உங்கள் குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை வரக்கூடாதா? இதோ இந்த 8 குறிப்புகள் உதவும்!

Top 8 Parenting Tips : உங்கள் குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை வரக்கூடாதா? இதோ இந்த 8 குறிப்புகள் உதவும்!

Aug 12, 2024 04:08 PM IST Priyadarshini R
Aug 12, 2024 04:08 PM , IST

  • Top 8 Parenting Tips : உங்கள் குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை வரக்கூடாதா? இதோ இந்த 8 குறிப்புகள் உதவும்!

சுத்தம் முக்கியம் - உங்கள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் துவங்கியவுடனே அவர்களின் பற்களை துலக்க துவங்கிவிடவேண்டும். அவர்களுக்கு மிருதுவான துணி அல்லது கைகாளால் பற்களை துலக்க கற்றுக்கொடுக்கவேண்டும். வாயை கொப்பளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தவேணடும். பின்னர் சிறிது காலத்தில் குழந்தைகள் பிரஷ் வாங்கி அவர்களின் பற்களை சுத்தம் செய்ய வலியுறுத்தலாம். பற்களின் உள்புறத்தில் உள்ள கன்னங்கள் மற்றும் ஈறுகள் மற்றும் நாக்குகளை ஒரு பருத்தி துணியில் கிளிசரினை நனைத்து சுத்தம் செய்து வாயை நன்றாக அவர்கள் கொப்பளிக்க பழக்கவேண்டும்.

(1 / 8)

பற்களில் ஒட்டும் உணவு - பற்களில் ஒட்டும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ண பழக்கவேண்டும். சாக்லேட்கள், முட்டாய்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதில் கேரட், ஆப்பிள், பீட்ரூட், சின்ன வெங்காயம் என காய்கறிகளை வெட்டிக்கொடுத்து சாப்பிட வைக்கவேண்டும்.

(2 / 8)

ஆப்பிள் - ஆப்பிள் ஒரு இயற்கை டூத் பிரஷ் ஆகும். அதை சாப்பிடும்போதே பற்களை சுத்தம் செய்யவும் அது உதவுகிறது. மேலும் ஸ்ட்ராபெரிகளும் சாப்பிடும்போதே பற்களை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால், அவற்றை சாப்பிட வைக்கவேண்டும். உங்கள் குழந்தைகளின் பற்களை ஆரோக்கியத்துடனும், சுத்தமாகவும் வைக்க எந்த ஒரு உணவையும் குழந்தைகளை மென்று சாப்பிடவேண்டும் என அறிவுறுத்துங்கள்.

(3 / 8)

இனிப்புகள் - உங்கள் குழந்தைகளுக்கு சாக்லேட்கள் அல்லது மிட்டாய்கள் அல்லது ஏதேனும் ஸ்வீட்கள் கொடுத்தால், அவதை அவர்கள் மதிய உணவு சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு முன் கொடுப்பது நல்லது. அது அடுத்து அவர்கள் உணவு சாப்பிடும்போது காணாமல் போய்விடும்.

(4 / 8)

நீர்ச்சத்து - உடலின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீர்ச்சத்துக்கும் தொடர்பு உண்டு. எனவே உங்கள் குழ்ந்தைகளின் வாய் மற்றும் பற்கள் நீர்ச்சத்துடன் உள்ளதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது கட்டாயம். அவர்களுக்கு நாள் முழுவதும் தண்ணீர் கொடுத்துக்கொண்டேயிருங்கள்.

(5 / 8)

சாப்பிட்ட பின் வாயை கொப்பளிக்க வேண்டும் - குழந்தைகளுடன் நீங்கள் வெளியே எங்கு சென்றாலும், உங்களுடன் தண்ணீரை எடுத்துச் செல்லவேண்டும். உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட்டாலும், உடனே அவர்களின் வாயை கழுவிவிடவேண்டும். உங்கள் குழந்தை உறங்கும்போது, அவர்கள் வாயில் பால் பாட்டிலோ அல்லது தண்ணீர் பாட்டிலோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தாலும் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படும். அது விரைவாக பரவும் தன்மையும் கொண்டது. உங்கள் குழந்தைகளை எப்போதும் எதை சாப்பிட்டாலோ அல்லது பருகினாலோ வாயை கொப்பளித்துவிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுங்கள். அந்த பழக்கத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கட்டும். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பற்களை பாதுகாக்க உதவும். மேலும் குழந்தையிலும் வாய்க் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, பற்களின் உள்ளே உணவு துகள்கள் தங்கி அவை பல் சொத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

(6 / 8)

குழிகளை அடைப்பது - உங்கள் குழந்தைகளுக்கு பற்களில் குழிகள் இருந்தால் அதை அடைப்பது மிகவும் நல்லது. அப்போதுதான் அங்கு எந்த உணவும் சென்று சிக்கிக்கொண்டு அவர்களுக்கு பல் சொத்தையை ஏற்படுத்தாது. மேலும் அவர்களுக்கு பல் சொத்தை பிரச்னைகளே ஏற்படாது. இதை உங்கள் பல் மருத்துவர்கள் உங்களுக்கு விளக்குவார்கள். மேலும் உங்கள் குழந்தைகளுக்கு செய்யக்கூடிய ஒரு பாதுகாப்பான ஒன்றுதான், இந்த குழிகளை அடைக்கும் வேலை.

(7 / 8)

ஃப்ளூரைட் - 5 வயதைக் கடந்த குழந்தைகளுக்கு பற்களில் ஃப்ளூரைடை வைப்பதால் அவர்களுக்கு அது பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு பல் சொத்தை ஏற்படாமல் காக்கும். மீண்டும், இதையும் தேவைப்பட்டால் உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் பல் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் செய்து கொள்ளலாம்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்