80 கிலோ வரை உடல் எடையைக் கூட்டி படிப்படியாக குறைத்தேன்.. ஒரு வாரம் ஆர்மி வீரர்களோட ட்ரெய்னிங்.. அமரன் கதை சொன்ன எஸ்.கே
80 கிலோ வரை உடல் எடையைக் கூட்டி படிப்படியாக குறைத்தேன்.. ஒரு வாரம் ஆர்மி வீரர்களோட ட்ரெய்னிங்.. அமரன் கதை சொன்ன எஸ்.கே குறித்து இப்படத்தில் பார்ப்போம்.

80 கிலோ வரை உடல் எடையைக் கூட்டி படிப்படியாக குறைத்தேன் எனவும், ஒரு வாரம் ஆர்மி வீரர்களோட ட்ரெய்னிங் ஆனேன் என்றும், சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்த கதையைச் சொல்லியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ’அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். பிப்ரவரி 16ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் டீசரின் மூலம் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.