கேரட் பாதாம் அல்வா; தீபாவளிக்கு தயாரகிவிட்டீர்களா? இதோ இந்த ஸ்வீட் எடுங்க! கொண்டாடுங்க!
கேரட் பாதாம் அல்வா செய்வது எப்படி என்று பாருங்கள். தீபாவளிக்கு தயாரகிவிட்டீர்களா இதோ இந்த எளிய ஸ்வீடை ஈசியாகச் செய்து, இந்த தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

தீபாவளி நெருங்கிவிட்டது. பட்டாசு, புத்தாடையெல்லாம் எடுத்து முடித்திருப்பீர்கள். அடுத்த இனி ஸ்வீட், காரம் என பலகார வேலைகளில் இறங்கவேண்டுமல்லவா? என்ன ஸ்வீட் செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? இதோ கேரடும், பாதமும் சேர்த்து அல்வாவை செய்துவிடலாம். கேரட்டில் ஸ்வீட் எப்படி செய் முடியும் என்று கேட்பவர்களுக்கு இந்த அல்வாவைக் கொடுத்து அசத்துங்கள். கேரடும், பாதாமும் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. எனவே இந்த ஸ்வீட் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது மகிழ்ச்சியான தீபாவளி மட்டுமல்ல ஆரோக்கியமான தீபாவளியும்தான். எனவே இந்த எளிய கேரட் அல்வாவை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு கேரட்டை பாலுடன் அரைத்து, பாதாமுடன் கலந்து எளிதாக செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் – கால் கப்
பால் – ஒரு கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பவுடர் – அரை கப் (இரண்டு மணி நேரம் சூடான தண்ணீரில் ஊறவைத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, நன்றாக உலரவிட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து பொடியாக்கிக்கொள்ளவேண்டும்)
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்ப்பொடி – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் கேரட்டை துண்டுகளாக்கி அதில் கால் கப் மட்டும் அளந்து எடுத்து குக்கரில் சேர்க்கவேண்டும். அடுத்து அதே அளவு பால், சிறிது குங்குமப்பூவைச் சேர்த்து, குக்கரில் இரண்டு விசில் விட்டு, இறக்கிவிடவேண்டும்.
குக்கர் ரிலீஸ் ஆனவுடன், இந்தக்கலவையை நன்றாக ஆறவைத்துவிடவேண்டும். ஃபேனில் வைத்து வேண்டுமானாலும் ஆறவைத்து எடுத்துக்கொள்ளலாம். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பாதாமை ஊறவைத்து, தோல் உறித்து, காயவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து அரைத்த கேரட் விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். அது வதங்கியவுடன், மேலும் கால் கப் பாலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
அதில் அரைத்து வைத்துள்ள அரை கப் பாதாம் பவுடரை சேர்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக கிளறிவிட்டு, அரை கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்துவிடவேண்டும். நன்றாக பபிள்ஸ் வந்து கொதி வந்தவுடன், மேலும் ஒரு ஸ்பூன் நெய்யை விடவேண்டும். அடுத்து ஏலக்காய்ப்பொடியை தூவவேண்டும்.
நன்றாக சுருண்டு அல்வா பதம் வரும்போது, இறக்கி வேறு பாத்திரத்தில் உடனடியாக மாற்றிவிடவேண்டும். சூப்பர் சுவையில் கேரட்-பாதாம் அல்வா தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது பார்ச்மென்ட் பேப்பரில் பாதாம் அல்வா போல் மடித்து வைத்தும் சாப்பிடலாம்.
பாதாம் பவுடரைக் கூட நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது இருந்தால், சில நிமிடங்களிலேயே செய்து முடித்துவிடவேண்டும். இந்த பாதாம் அல்வாவை தீபாவளிக்கு கட்டாயம் செய்து அசத்துங்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்.
நீங்கள் தீபாவளிக்கு செய்தால், அவர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் வேண்டும் என்று கேட்பார்கள். எனவே இந்த தீபாவளிக்கு இந்த கேரட் பாதாம் அல்வாவை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

தொடர்புடையை செய்திகள்