தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக வேண்டுமா? இதோ இந்த 10 குறிப்புகள் உதவும்!

Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக வேண்டுமா? இதோ இந்த 10 குறிப்புகள் உதவும்!

Priyadarshini R HT Tamil

Aug 20, 2024, 01:52 PM IST

google News
Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தால், உங்களுக்கு மாற்றம் தெரியும். அதற்கு இந்த 10 குறிப்புகள் உதவும்.
Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தால், உங்களுக்கு மாற்றம் தெரியும். அதற்கு இந்த 10 குறிப்புகள் உதவும்.

Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தால், உங்களுக்கு மாற்றம் தெரியும். அதற்கு இந்த 10 குறிப்புகள் உதவும்.

உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக வேண்டுமெனில், இந்த 10 விஷயங்களை கட்டாயம் செய்யவேண்டும்.

உங்கள் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த உதவுவது எப்படி?

உங்கள் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்த சில ஸ்மார்ட் டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், ஊக்கப்படுத்தவும், ஒட்டுமொத்த கற்றல் அனுபவத்தை அதிகரிக்கவும், பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கவும் உதவும். உங்கள் குழந்தைகளில் கல்வியில் சிறந்து விளங்க இந்த குறிப்புகள் அவர்களுக்கு உதவும்.

வழக்கத்தை உருவாக்குங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு அன்றாட பணிகளை செய்வதற்கு ஒரு வழக்கத்தை உருவாக்குவது மிகவும் கடினம். படிப்பதற்கு ஒரு பழக்கத்தை உருவாக்குங்கள். அது அவர்களின் நேரத்தை சரியாக செலவிட உதவும். படிக்க, வீட்டுப்பாடங்களை செய்வதற்கு, இடைவேளை, விளையாட்டு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம். இந்தப்பழக்கம் இருந்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.

பிரார்த்தனை

உங்கள் நாளை ஒரு பிரார்த்தனையுடன் துவங்குங்கள். உங்களின் மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உங்களுக்கு பிரார்த்தனை உதவும். உங்களின் கவனம் சிதறாமல் இருக்கவும், அதிகரிக்கவும் உங்களுக்கு பிரார்த்தனைகள் உதவும். ஒரு மாணவருக்கு இது மிகவும் தேவை.

படிக்க தனியிடம்

படிப்பதற்கு என்று தனியிடம் ஒன்றை உருவாக்குங்கள். அந்த இடம் மற்ற எந்த தொந்தரவுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் இருக்கவேண்டும். நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். இது உங்களின் கவனத்தை அதிகரித்து, நன்றாக படிக்க உதவும். நீங்கள் படிக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை வைத்திருங்கள். அப்போதுதான் எதற்கும் நீங்கள் எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

தெளிவான இலக்குகள்

உங்கள் குழந்தைகளுக்கு தெளிவான இலக்குகளை நிர்ணயுங்கள். அவர்கள் எட்டக்கூடியவையாகவும் இருக்கட்டும். இந்த இலக்குகளை சிறிதாக்கி, ஒவ்வொன்றாக அவர்களை சாதிக்கச் செய்து, அவர்கள் அதிகப்படியான சுமையை ஏற்றிக்கொள்ளாமல், ஒவ்வொன்றாக முடிக்க ஏதுவானதாக்கிவிடுங்கள்.

கற்றலை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தைகள் நன்றாக கல்வி கற்க வேண்டுமெனில் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடும் வகையிலான கல்வியாக அது அமையவேண்டும். கல்வி விளையாட்டுகள், பயிற்சிகள், ஆய்வுகள், உரையாடல்கள் என அவர்களின் கற்றலை மேலும் மகிழ்ச்சியானதாகவும், இனிமையானதாகவும் மாற்றுங்கள்.

ஆரோக்கியமான பழக்கவழக்ங்கள்

உங்கள் குழந்தைகள் சரிவிகித உணவு உட்கொள்வதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும். போதிய உறக்கம் அவர்களுக்கு கட்டாயம் தேவை. ஆரோக்கியமான உடல்தான் மூளை நன்றாக இயங்க காரணமாகிறது. நன்றாக கவனிக்கவும் உதவுகிறது.

கல்வி தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்

கல்வி ஆப்கள், ஆன்லைன் கல்வி மெட்டீரியல்களை உங்கள் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளட்டும். இது அவர்களின் பாரம்பரிய கல்வி முறையுடன் இணைந்தே செல்லட்டும். தொழில்நுட்பம், தனிப்பட்ட கல்வி அனுபவத்தை வழங்கும். நீங்கள் கலந்துரையாடும் வகையிலான நுட்பங்கள், சிக்கலான படிப்புகளையும், எளிதாக உங்களுக்கு புரியவைக்கும்.

வாசிப்பதை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த, அவர்களுக்கு பல்வேறு புத்தகங்களை வழங்குங்கள். அவர்களின் வயது, ஆர்வம், வாசிக்கும் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கு புத்தகங்களை வழங்குங்கள். அவர்கள் தொடர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு தெரியும் புதிய வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும், இதனால் அவர்களின் கிரிட்டிக்கல் சிந்தனை திறன் அதிகரிக்கும்.

மனநலன்

உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் மன அல்லது உளவியல் பிரச்னைகள் உள்ளதா என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் அந்த பிரச்னைகள் இருந்தாலும் அவர்களின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படும். எனவே மனஅழுத்தம், பயம் குறித்து அவர்களுடன் எப்போதும் திறந்த உரையாடலை நடத்துங்கள். தேவைப்பட்டால் கவுனிசிலிங் செல்லாம்.

கூடுதல் படிப்புகள்

உங்கள் குழந்தைகள் படிப்பைதவிர எக்ஸ்ட் கரிக்குலர் எனப்படும் கூடுதல் விஷயங்களில் கவனம் செலுத்துவது அவர்களின் திறன்களை அதிகரிக்கும். அவர்களுகுகு அது குழுவாக இயங்குவது, நேர மேலாண்மை, ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கும். இசை, விளையாட்டு என அவர்களின் படிப்பு கூடவே சிலவற்றையும் சேர்த்து கற்கட்டும். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

திறந்த உரையாடல்

உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் வளர்ச்சியில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைகள் பள்ளியில் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பேசுங்கள். அதையும் தவிர்க்க வீட்டில் வியூகம் அமைக்க அது உதவும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை