Morning Motivation : காலையில் கண் விழிக்கும் குழந்தையிடம் இந்த விஷயங்களை கூறுங்கள்! அவர்களின் நாள் சிறப்பாகும்!
Morning Motivation : உங்கள் குழந்தை விழத்து எழுந்து காலை வேலைகளை முடித்தவுடன் அவர்களிடம் இந்த 8 விஷயங்களை கூறுங்கள். அவர்களின் நாளே நேர்மறையாக அமையும்.
குழந்தைகள் என்ன கேட்க விரும்புகிறார்கள்?
உங்கள் குழந்தைகளை காலையில் எழுந்தவுடன் அவர்களை ஒரு மணிநேரம் காலை கடன்களை செய்யவைத்துவிட்டு, அவர்களிடம் நீங்கள் உற்சாகமாக பேசினால், உங்களுக்கும், அவர்களுக்குமான பிணைப்பு அதிகரிக்கும். எனவே, நீங்கள் எழுந்தவுடன் இந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள்.
உன் மீதான் என் அன்பை எதுவும் மாற்றாது
உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் அன்பு நிபந்தனையற்றது என்பதை புரியவைப்பது மிகவும் முக்கியமானது. அவர்களிடம் நீங்கள் இதை கூறும்போது, உன் மீதான எனது அன்பை எதுவும் மாற்றாது என்றால் அவர்கள் உற்சாகம் கொள்வார்கள்.
அவர்கள் மகிழ்ந்து அந்த நாளையே நேர்மறை சிந்தனைகளால் நிரப்பிக்கொள்வார்கள். அவர்களுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள். உற்சாகமாக அவர்களை நாளை துவங்குவார்கள். இது குழந்தைக்கும், உங்களுக்குமான உறவை வலுப்படுத்தும்.
உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கும். நம்பிக்கையைக் கொடுத்து, அவர்கள்தான் உங்களுக்கு முக்கியம், அவர்களை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு கொடுக்கும். இதனால் அவர்களின் நாளின் உற்சாகம் அதிகரிக்கும்.
நீ என்னவாகவேண்டும் என்று நினைக்கிறாயோ அதுதான் நீ
உங்கள் குழந்தைகளின் திறன்களை குறிப்பிட்டு, நீங்கள் அவர்களை பாராட்ட வேண்டும். அது அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். அவர்களின் நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று பொருள்.
இதனால் அவர்கள் உற்சாகம் அடைவார்கள். இந்த வார்த்தைகள் உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் கனவுகளை பின்தொடர உதவும். இதனால் அவர்கள் அடைய விரும்பிய இலக்குகளை அடைவார்கள்.
எப்போதும் கடுமையானவற்றை முயற்சியுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு விடாமுயற்சியைக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் தங்களின் சவால்களை கடக்க விடாமுயற்சி ஒன்றே ஆயுதம். உங்கள் குழந்தைகளிடம் இதைக் கூறும்போது, அவர்களுக்கு முயற்சி மற்றும் அதை தொடர்வது ஆகியவற்றின் முக்கியத்துவம் புரியும்.
இந்த ஊக்கம் அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை வகுத்துக்கொள்ள உதவும். அவர்களின் தோல்விகள் மற்றும் பின்னடைவுகளில் இருந்து மீளவும் உதவும். தோல்விகளே வெற்றிக்கான படிகட்டுகள் என்று புரிந்துகொள்ள உதவும்.
நீங்கள் நீங்களாக இருக்கவேண்டும்?
ஒப்பிடும் உலகிலி, உங்கள் குழந்தைகள் அவர்கள் அவர்களாகவே இருக்கும்போது, அவர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்கள் அறியச்செய்வது மிகவும் முக்கியம். இது அவர்களின் தனித்திறமைகளை அவர்கள் வெளிப்படுத்த உதவுகிறது. அவர்களின் தனித்திறன்கள் மதிக்கப்படுவதை அவர்களுக்கு காட்டுகிறது. இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. மற்றவர்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பதன் மீதான் அழுத்தத்தை குறைக்கிறது.
இன்று நீ புதிதாக என்ன கற்கப்போகிறாய்?
உங்கள் குழந்தைகள் அன்றாடம் என்ன செய்ய விழைகிறார்கள் என்பதில் நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டினால் போதும். அதை நீங்கள் கேட்கும்போதே அவர்களுக்கு உற்சாகம் கிளம்பும். அதில் மேலும் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்கு கற்றல் மீதான காதல் அதிகரிக்கும். அதேபோல், அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன், உங்களுக்கு பள்ளியில் இன்றைய நாள் எப்படி கழிந்தது என்று கேளுங்கள்.
இது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரித்து அவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும். உங்கள் குழந்தைகளை அன்றாடம் கற்க உற்சாகப்படுத்தி, அவர்கள் புதிதாக கற்றவற்றை பாராட்டினால் அவர்கள் மிகவும் உற்சாகமாக புதிய விஷயங்களை தேடித்தேடி கற்பார்கள்.
எதையாவது கூற விரும்புகிறாயா?
இந்தக் கேள்வியை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் எப்போது கேட்டாலும், அது அவர்களிடம் திறந்த மற்றும் பாதுகாப்பான உரையாடலுக்கு வழிவகுக்கும். அவர்களின் சிந்தனைகளை குழந்தைகள் அச்சமின்றி உங்களிடம் உரைப்பார்கள். இது அவர்களின் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள உதவும். இந்த பழக்கம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பெற்றோர் மற்றும் குழந்தை உறவை வலுப்படுத்தவும் உதவும்.
நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன்
உங்கள் குழந்தைக்கு தொடரந்து ஆதரவைக் கொடுங்கள். அது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். நான் எப்போதும் உனக்காக இருப்பேன், என்ன இருந்தாலும், நீ எப்போதும் என்னை சார்ந்திருக்கலாம் என்பதை உணர்த்துங்கள். இந்த உணர்வு அவர்களை வலுப்படுத்தும். அவர்களின் அச்சத்த்தை குறைக்கும். அவர்களுக்கு உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்