Good Bad Ugly: துணிவு… ஒழுக்கம்.. கண்ணியம்.. ‘32 வருட சினிமா சாம்ராஜ்யம்’ - போஸ்டர் விட்ட குட் பேட் அக்லி படக்குழு!
Good Bad Ugly: அஜித்தின் திரைவாழ்க்கையை கொண்டாடும் விதமாக, குட் பேட் அக்லி படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
Good Bad Ugly: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக, படத்தில் அவரது லுக்கை பாதுகாக்க வேண்டும் என்பதால், படப்பிடிப்பில் அஜித்குமாருடன் செல்ஃபி எடுக்க படக்குழு தடை விதித்திருந்தது. இதைக்கேள்விபட்ட அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்யுமாறு கூறினார்.
32 வருட திரைவாழ்க்கை கொண்டாட்டம் - அஜித்திற்காக போஸ்டர் விட்ட குட் பேட் அக்லி குழு!
அதன் படி, அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 19ல் வெளியிடப்பட்டது. அதில் அஜித்தின் வெவ்வேறு பாணியிலான மூன்று படங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் நடிகர் அஜித் குமார் கலர் ஃபுல்லான சட்டை அணிந்து, ஸ்டைலான கூலர் போட்டு, கையில் டாட்டூக்களுடன் மாஸாக இருந்தார். அதன் பின்னர் படத்தில் இருந்து இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் அஜித்தின் திரைவாழ்க்கையை கொண்டாடும் விதமாக, குட் பேட் அக்லி படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த போஸ்டரில், 32 வருட மனஉறுதி, துணிவு, ஒழுக்கம் மற்று கண்ணியம் ‘குட் பேட் அக்லி’ உடன் பயணம் செய்கிறது. இன்னும் பல ஆண்டுகள் உங்கள் புகழ் ஓங்க வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டு இருக்கிறது.
விலைமதிப்பற்ற தருணங்கள்
குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் தொடர்பாக முன்பு கூறும் போது "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் விலைமதிப்பற்ற தருணங்கள் உள்ளன. இது எனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. அஜித் குமார் சாருடன் பணிபுரிவது எனக்கு ஒரு நீண்ட கனவாக இருந்தது. அவருடன் பணிபுரிவதில் நான் எமோஷனலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ரவிசங்கர் சார் ஆகியோருக்கு நன்றி’’ எனத் தெரிவித்து இருந்தார்.
படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது.
இன்றைய தினம் விடாமுயற்சி திரைப்படத்தில் இருந்தும் அவரின் 32 ஆண்டு கால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. துணிவு படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். அனிருத் இசையமைத்து இந்தப்படத்தில் அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்