உணவு உண்டபின் தினமும் இந்த உருண்டை; உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகளைக் கொடுக்கிறது பாருங்கள்?
Nov 01, 2024, 10:05 AM IST
உணவு உண்டபின் தினமும் இந்த உருண்டை, உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகளைக் கொடுக்கிறது பாருங்கள்? என்ன உருண்டை என்று தெரியவில்லையா? இதை வீட்டிலே செய்வது எளிது.
நீங்கள் சாப்பிட்டவுடன் தினமும் எள்ளு உருண்டையை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். எள்ளு உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. எள்ளு, மிகவும் சிறிய விதைகளாக இருக்கும். ஆனால் இது இந்திய உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
எள்ளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஆரோக்கிய கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இதில் புரதம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளது. மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த அடர் ஊட்டச்சத்துக்கள், உங்கள் சரிவிகித உணவுக்கு சிறப்பான தேர்வாக மாற்றுகிறது.
இதய ஆரோக்கியம்
இதில் உள்ள பாலிசாச்சுரேடட் மற்றும் மேனோ சாச்சுரேடட் கொழுப்பு, உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, இதில் உள்ள செசமின் மற்றும் செசமோல் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்களுக்கு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் இதயத்தின் இயக்கத்தை அதிகரிக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
எள்ளில் அதிகம் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த மினரல்கள், உங்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இது எலும்புப்ரை நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தினமும் சிறிதளவு எள்ளு எடுத்துக்கொள்வதை வழக்கமாகக்கொள்வது உங்களின் கால்சியத் தேவையை பூர்த்தி செய்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
எள்ளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் செல்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள ஃபைட்டோஸ்டிரோல்கள் மற்றும் லிக்னன்கள், உங்கள் உடலின் திறனை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைப் போக்குகிறது.
செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
எள்ளில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. எள்ளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. செரிமான ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலன் மேம்பட உதவுகிறது.
சருமம் மற்றும் தலைமுடி நன்மைகள்
எள்ளு மற்றும் அதில் உள் நற்குணங்கள், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எள்ளில் இருந்து பெறப்படும் எண்ணெயில் வைட்டமின் இ சத்துக்கள் உள்ளது. ஃபேட்டி ஆசிட்களும் அதிகம் உள்ளதால், எள்ளு உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. இது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எள்ளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்களின் சரும பளபளப்பை அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது
எள்ளு, உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது என்ற சில ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. நீரிழிவு மற்றும் இன்சுலின் சென்சிட்டிவிட்டி உள்ளவர்கள், எள்ளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாகக்கொள்வது நல்லது. இதன் ஆரோக்கிய கொழுப்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உணவில் சேர்த்துக்கொள்வது எளிது
எள்ளின் முக்கிய நன்மைகளுள் ஒன்று, எள்ளை நீங்கள் எளிதாக அனைத்து உணவுகளிலும் சேர்த்துக்கொள்ள முடியும். இதை நீங்கள் செய்யும் சாலட்கள், ஸ்மூத்திகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், ஃப்ரைகள் மற்றும் இனிப்புகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதை ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். இதை நீங்கள் எந்த உணவில் வேண்டுமானாலும் தூவி சாப்பிடலாம். இதன் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை முற்றிலும் பெறுவதற்கு நீங்கள் எவ்வித முயற்சியும் எடுக்கத் தேவையில்லை.
டாபிக்ஸ்