தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமும் இந்தப்பழம் ஒன்று மட்டும் போதும்! ஹாஸ்பிட்டலே செல்ல தேவையில்லை தெரியுமா? அது எது?

தினமும் இந்தப்பழம் ஒன்று மட்டும் போதும்! ஹாஸ்பிட்டலே செல்ல தேவையில்லை தெரியுமா? அது எது?

Priyadarshini R HT Tamil

Nov 01, 2024, 07:00 AM IST

google News
தினமும் இந்தப்பழம் ஒன்று மட்டும் போதும்! ஹாஸ்பிட்டலே செல்ல தேவையில்லை தெரியுமா? அது என்ன பழம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் இந்தப்பழம் ஒன்று மட்டும் போதும்! ஹாஸ்பிட்டலே செல்ல தேவையில்லை தெரியுமா? அது என்ன பழம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் இந்தப்பழம் ஒன்று மட்டும் போதும்! ஹாஸ்பிட்டலே செல்ல தேவையில்லை தெரியுமா? அது என்ன பழம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் ஒரே ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் நீங்கள் மருத்துவரை விலக்கி வைக்க முடியுமா? என்று தெரிந்துகொள்ளுங்கள். இது காலங்காலமாகக் கூறப்பட்டு வரும் பழமொழி, எனவே நீங்கள் ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள். ஆப்பிளில் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளது. ஒரு ஆப்பிளை சாப்பிடுவது, உங்கள் உடலில் எண்ணற்ற நன்மைகளைத் தூண்டுகிறது. இது உங்கள் உடலில் பல நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க நீங்கள் ஆப்பிளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதயத்தின் சுத்தம் செய்யும் திறன்

ஆப்பிள் உங்கள் உடலில் கொழுப்பை குறைக்க மட்டுமல்ல, இது உங்கள் தமனிகளில் ப்ளேக்குகள் உருவாகாமலும் தடுக்கிறது. எனவே உங்கள் தமனிகளை சுத்தம் செய்ய ஆப்பிள்கள் உதவுகிறது.

நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு

ஆப்பிளில் ஆச்சர்யமூட்டும் நுரையீரல் ஆரோக்கியம் உள்ளது. ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. இது நுரையீரலைத் தாக்கும் ஃப்ரி ராடிக்கல்களைப் போக்குகிறது. இதனால் உங்களால் ஆழமாக சுவாசிக்க உதவுகிறது. இது நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைப் போக்குகிறது. இதனால் நுரையீரல் நீண்ட காலம் செயல்படுகிறது.

குடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம்

குடல் மற்றும் மூளை இரண்டு உறுப்புக்களுக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது. ஆப்பிளில் உள்ள பெக்டின் உங்கள் உடலுக்கு ப்ரிபயோடிக்குகளாக செயல்படுகிறது. உங்கள் குடலுக்கு நல்ல பாக்டீரியாக்களைக் கொடுக்கிறது. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள்தான் உங்கள் மனஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

மூளை ஆரோக்கியத்தை கூராக்குகிறது

தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. ஆப்பிளை தினமும் நீங்கள் சாப்பிடுவதால், உங்கள் மூளையை கூராக்கும் சுவையான வழியாகும். மூளையின் பலத்தை அதிகரிக்கிறது.

வயிறை தட்டையாக்குகிறது

உடல் எடை மேலாண்மை எனும்போது, ஆப்பிள்கள் உங்களுக்கு வயிற்றை மட்டும் நிரப்புவதில்லை. இது உங்களுக்கு வயிற்றை தட்டையாக்குகின்றன. இது உங்களுக்கு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற ஆர்வத்தை குறைக்கிறது

அடிக்கடி இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுபவர்களுக்கு ஆப்பிள் ஒரு இயற்கை மூலம் ஆகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் இதன் இயற்கை குணங்கள், ஆப்பிளை உங்களுக்கு திருப்தியான ஸ்னாக்ஸாகவும், ஆரோக்கியமான ஒன்றாகவும் மாற்றுகிறது. இது உங்களுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்தைக் காக்கும் ஆப்பிளில் உள்ள பாலிஃபினால்கள்

ஆப்பிள்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை. இதில் உள்ள பாலிஃபினால்கள் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், உங்கள் கல்லீரலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. எனவே இதன் கழிவுநீக்க குணங்களுக்காகவே நீங்கள் இதை சிறந்த ஸ்னாக்ஸாகப் பயன்படுத்தலாம்.

தினமும் ஆப்பிளை சாப்பிட்டால் நீங்கள் மருத்துவரிடமே செல்ல தேவையில்லை என்பதுதான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் அன்றாட உணவில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஆரோக்கிய குறிப்புகள், ரெசிபிக்கள் ஆகியவற்றை, தேர்ந்தெடுத்து தினமும் ஹெச். டி. தமிழ் வழங்கி வருகிறது. எனவே இதுபோன்ற தகவல்களைப் பெறுவதற்கு நீங்கள் எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி