வாய்ப்புக்காக அலைந்த நாட்கள்.. வெற்றிமாறன் சாரிடம் இருந்து வந்த அழைப்பு.. வாழ்க்கைமேலே இருந்த கேள்விகள்.. விஜய் சேதுபதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வாய்ப்புக்காக அலைந்த நாட்கள்.. வெற்றிமாறன் சாரிடம் இருந்து வந்த அழைப்பு.. வாழ்க்கைமேலே இருந்த கேள்விகள்.. விஜய் சேதுபதி

வாய்ப்புக்காக அலைந்த நாட்கள்.. வெற்றிமாறன் சாரிடம் இருந்து வந்த அழைப்பு.. வாழ்க்கைமேலே இருந்த கேள்விகள்.. விஜய் சேதுபதி

Dec 15, 2024 10:30 AM IST Marimuthu M
Dec 15, 2024 10:30 AM , IST

  • வாய்ப்புக்காக அலைந்த நாட்கள்.. வெற்றிமாறன் சாரிடம் இருந்து வந்த அழைப்பு.. வாழ்க்கைமேலே இருந்த கேள்விகள் என விஜய் சேதுபதி பல தகவல்களைப் பேட்டியளித்துள்ளார். 

விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அதன் முதல் பாகத்தில் நடித்த சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்ததாக மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

(1 / 6)

இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் அனுபவம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி,சூரி ஆகியோர் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளனர். இந்த நேர்காணலை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் எடுத்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:கேள்வி: தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க என்கிற விடுதலை 2 ட்ரெய்லரில் வரும் வசனம் விஜயை சொன்ன மாதிரி இருக்கே. ஒரு வேளை, அந்தக் காலத்தில் இருக்கும் எம்.ஜி.ஆரை சொன்ன மாதிரியா?விஜய்சேதுபதி: இல்லை சார். அது என்னுடன் பேசும் ஒரு தோழருக்கான பதில் தான் இது. அவர் என்னை வந்து பார்க்கையில் ஒரு ரசிகர் மனநிலையில் வந்து பார்க்கக்கூடாது என்பது தான். நாங்கள் சொல்றது, நீயும் தலைவர் தான். உன்கிட்ட ஒரு சித்தாந்தம் இருக்கும்போது உங்களிடம் இருந்து ஒரு தலைவன் வருவான். என்னை அப்படி பார்க்காதீங்கன்னு வாத்தியார் சொல்றது தான் அது.சூரி:படமாக பார்க்கும்போது இதற்குண்டான பதில் புரியும் சார். 

(2 / 6)

'கேள்வி: விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதி 8 நாள்கள் தேதி கேட்டுட்டு, 120 நாட்கள் நடிச்சுக்கொடுத்தீங்க? எப்படி சமாளிச்சீங்க?விஜய்சேதுபதி: வெற்றி சார் வந்து நடிகர் மேல் பிரஷர்போட மாட்டார் சார். இதுவரைக்கும் பிரஷர் போட்டதே கிடையாது. எல்லார்கிட்டேயும் இருக்கிற மாதிரி எனக்கும் இவர் பிடிவாதக்காரரோ அப்படிங்கிற பிம்பம் இருந்தது. அவர் அப்படிப்பட்ட ஆளே கிடையாது. ரொம்ப ஃபிளக்‌ஷிபளா வைச்சுக்குவார். முடியுமான்னு பாருங்கன்னு தான் கேட்பார்'.

(3 / 6)

‘முருகதாஸுனு ஒரு நடிகர் இருக்கிறான் சார். அவனும் நானும் கூத்துப்பட்டறையில் இருந்து நண்பர்கள். நானும் அவனும் ‘ பொல்லாதவன்’ படத்துக்கு வாய்ப்புக்கேட்டு போனோம். அடுத்து ‘ஆடுகளம்’ படத்திலும் நான்கைந்து முறை போய் வாய்ப்புகேட்டு போய் போட்டோ கொடுத்திட்டு வந்திருக்கேன். அப்பவே, எனக்கு அவர்கூட வொர்க் பண்ணனும்னு இருந்தது. விடுதலை படம் தொடங்குறதுக்கு முன்னாடி நேரில் பார்த்துபேசினோம். ஒரு 5 மணி நேர கதையை, 15 நிமிஷத்தில் சொல்லிட்டார்’.

(4 / 6)

'அப்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நடிச்சிட்டு இருந்தேன். 8 நாட்கள்னு சொல்றாங்க. ஆனால், 8 நாட்களில் வாத்தியார் ஆவுறது சாத்தியமே இல்லைன்னு சொன்னதும், அவர் போய்ட்டு வாங்கன்னு சொல்லிட்டார். அந்த 8 நாளும் டெஸ்ட் சூட் எடுத்த மாதிரி தான் இருந்தது. ஆனால், அவர் 8 நாள் மட்டும் எடுத்திட்டு அனுப்பியிருந்தால் நான் வருத்தப்பட வாய்ப்பு இருக்கு. இந்தப்படமும் இவருடன் நான் வேலை பார்த்த அனுபவமும் சில காட்சிகளும் அதற்கு எழுதப்பட்ட வசனங்களும் என்னை வாழ்க்கைமேலே சில கேள்விகளை எழுப்புச்சு. சிந்திக்க வைச்சது. நான் வெற்றிமாறன் என்கிற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்கிற டிகிரியை படிச்சு வாங்குனேன் சொல்றது இருக்குல, அது வெறும் காமெடிக்கான ஸ்டேட்மென்ட் இருக்குல்ல. அது ஒரு உணர்வு. இந்த அனுபவம் எங்கும் கிடைக்காது. இதை நான் வாழ்க்கை எனக்கு கொடுத்த பொக்கிஷமாகத்தான் பார்க்குறேன்'.

(5 / 6)

'நானும் சூரியும் வெண்ணிலா கபடி குழுவில் இருந்து நண்பர்கள். காமெடி மட்டும் பண்ணாதே, துணைக்கதாபாத்திரங்களிலும் செய்னு சொல்வேன் சார். ரம்மி, சுந்தரபாண்டியனில் அவன் கூட நடிக்கும்போது, ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கெடுவான் சார். இப்ப, பாண்டிராஜ் சார் இயக்கத்தில் நடிச்சிட்டு இருக்கேன். சூரி காமெடி ஒர்க் அவுட் ஆகுறதுக்கு, வாழ்க்கையில் இருந்து அவ்வளவு இன்புட்ஸ் போடுவான்னு சொல்வார். வெற்றிமாறன் சாருக்கு பகிர்ந்துக்கிற தன்மை இருக்கு. புரியுற மாதிரி சொல்வார் சார். அதை எடுத்துக்கிறது நிறைய இருக்கும். அதை உயர்ந்த குணமாகப் பார்க்குறேன் சார்'' என சொல்லிமுடித்தார், நடிகர் விஜய் சேதுபதி

(6 / 6)

மற்ற கேலரிக்கள்