தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாலை நேரங்களில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற பெயர்கள்; க்யூட்டாகவும் இருக்கும்!

மாலை நேரங்களில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற பெயர்கள்; க்யூட்டாகவும் இருக்கும்!

Priyadarshini R HT Tamil

Nov 22, 2024, 02:01 PM IST

google News
மாலை நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற குளுமையான மற்றும் க்யூட்டான பெயர்கள்.
மாலை நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற குளுமையான மற்றும் க்யூட்டான பெயர்கள்.

மாலை நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற குளுமையான மற்றும் க்யூட்டான பெயர்கள்.

உங்கள் குழந்தைகள் மாலை நேரத்தில் பிறந்தவர்களா? அவர்களுக்கு வைக்க ஏற்ற பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மாலை நேரம் தெய்வீக சக்திகள் நிறைந்த நேரமாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் பிறப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். அந்த அழகிய மாலை நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வைப்பதற்கு ஏற்ற அழகிய பெயர்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த குழந்தைகளை நீங்கள் உங்கள் அழகிய பெண் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு வளமாக வாழ்த்துங்கள்.

சாயா

சாயா என்றால், நிழல் என்று நிழல் என்று பொருள். இது மிருதுவான, இதமான, குளிர்தரக்கூடிய, அதாவது மாலையின் அழகை ஏற்றக்கூடிய என்று பொருள். மாலையின் இதம் என்ற மற்றொரு பொருளையும் இந்தப்பெயர் தரும். ஒரு இதமான சூழலைத்தரும். இந்தப்பெயர் நேர்த்தியான, இதமான மற்றும் அமைதியான என்ற பொருளைத் தருகிறது.

தாரா

தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். இந்தப்பெயர் மாலை நேர வானம் மற்றும் நட்சத்திரங்களுடன் தொடர்புடையது. இது அறிவாளி, நம்பிக்கை மற்றும் ஆச்சர்யமான போன்ற எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இந்தப்பெயர் எல்லா காலத்திற்கும் ஏற்றது மற்றும் மற்றவர்களை கவர்ந்திழுக்கக்கூடியது.

ஷாய்லி

ஷாய்லி என்றால் ஸ்டைலான மற்றும் வழக்கமான என்று பொருள் தரக்கூடியது. இந்தப்பெயர் கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பெயர் வானில் தெரியக்கூடிய அழகான பொருட்கள் என்ற பொருளையும் தருகிறது. இந்தப்பெயர் தனித்தன்மையானது. நேர்த்தியான மற்றும் கலைத்திறன்கொண்ட என்பதையும் குறிக்கிறது.

நிஷி

நிஷி என்றால் இரவு என்று பொருள். நிடுநிசி என்றால் நடு இரவு என்று பொருள். அமைதியான இரவு, நள்ளிரவு எத்தனை நிசப்தமாக இருக்கும். அத்தனை அமைதியானவர்கள். இந்தப்பெயர் மிகுந்த அமைதியைக் குறிக்கும். நள்ளிரவின் கடுமை மற்றும் அமைதியை குறிக்கிறது.

லாவண்யா

லாவண்யா என்றால், கருணை அல்லது அழகு என்று பொருள். இது அமைதியான நேர்த்தியுடன் தொடர்புடையது. மாலையின் அமைதியில் திளைத்தல் என்பதைக் குறிக்கிறது. இயற்கை மெதுவாக இரவின் ஒளியை நிரப்பும் நேரம். இந்த இரவு அழகானது என்பதைக் குறிக்கிறது. இந்தப்பெயர் அதிநவீனம் மற்றும் வசீகரம் என்று பொருள்.

திப்தி

திப்தி என்றால் ஒளி மற்றும் மிளிர்வு என்று பொருள். இது இதமான மற்றும் மாலை நேரத்து இதமான சூரியனைக் குறிக்கும். இது ஒளிமயமான, நேர்மறையான மற்றும் வாழ்வின் வழிகாட்டும் ஒளி ஆகியவற்றைக் குறிக்கிறது.

சுமீரா

சுமீரா என்றால் மாலையின் இளவரசி என்று பொருள் அல்லது மாலையின் நட்சத்திரம் என்று பொருள். ஒளிமயமான, வசீகரிக்கக்கூடிய போன்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. மாலையில் இருந்து இரவுக்குள் புகும் நேரம் என்று பொருள். இந்தப்பெயர் கவித்துவமானது. இது நிசப்தம் மற்றும் கவர்ச்சி என கூறப்படுகிறது.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி