Snoring Reducing Tips: பார்டனரின் குறட்டை தொல்லையால் கெட்டுப்போகும் தூக்கம்! விடுபட இந்த டிப்ஸ் தவறாமா பாலோ செய்யுங்க
Oct 02, 2024, 09:46 PM IST
Snoring Reducing Tips: குறட்டை பலருக்கு தொல்லை தரும் விஷயமாகவே உள்ளது. பார்டனரின் குறட்டை தொல்லை காரணமாக பலருக்கும் உறவுச் சிக்கல் ஏற்படுவதுண்டு. குறட்டை தொல்லையால் பலருக்கு தூக்கம் கெட்டுப்போகும் சூழலும் உள்ளது. குறட்டை பிரச்னையில் இருந்து விடுபட தவறாமா பாலோ செய்ய வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்
ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் குறட்டை ஏற்படுவது இயல்புதான். குறட்டை என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். எடை மேலாண்மை மற்றும் ஒவ்வாமைகளை குறைப்பது உள்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம்.
குறட்டை பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னையாக உள்ளது. குறட்டை விடுபவர் தூங்கும் போது அதை உணராவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு அது ஒரு கடினமான சூழ்நிலையாக அமையக்கூடும். குறிப்பாக குறட்டை பார்ட்னர்கள் மத்தியில் சண்டை, சச்ரவுகளை உருவாக்குகிறது. குறட்டை காரணமாக ஜோடிகள் விவாகரத்து செய்யும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதேபோல் குறட்டை ஏற்டுத்தும் தாக்கத்தை வைத்து சில சினிமா படங்களும் வெளியாகியுள்ளன.
குறட்டை, சில சமயங்களில் மூச்சுத் திணறலுக்கும் வழிவகுக்கும். ஆனால் அது ஏன் நடக்கிறது? இதுதொடர்பாக மும்பை சென்ட்ரல் வொக்கார்ட் மருத்துவமனையின் ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஷீத்தல் கோயல் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளிக்க நேர்காணலில், "குறட்டை என்பது தூக்கத்தின் போது வாய் மற்றும் மூக்கு வழியாக செல்லும் காற்றோட்டத்தின் பகுதியளவு தடையால் தொண்டையில் உள்ள திசுக்களின் அதிர்வு ஆகும்."
குறட்டை ஏற்படுவதற்கான காரணிகள்
இதுபற்றி டாக்டர் ஷீத்தல் கோயல் அளித்த விளக்கத்தில், "நாசி நெரிசல், விரிவாக்கப்பட்ட டான்சில்ஸ் அல்லது அடினாய்டுகள், உடல் பருமன், தூங்கும் நிலை, வயது அதிகரிக்கும் போது தொண்டை தசைகள் இயற்கையாகவே தளர்த்தப்படுதல் உள்ளிட்ட பல காரணிகள் இந்த தடைக்கு வழிவகுக்கும்.
நாம் தூங்கும் போது, நமது தொண்டையில் உள்ள தசைகள் தளர்ந்து, சுவாசப்பாதையை மடிந்து குறட்டைக்கு வழி வகுக்கும்.
கூடுதலாக, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் இந்த தொண்டை தசைகளை மேலும் தளர்த்தலாம். அத்துடன் நாசி நெரிசலை அதிகரித்து, மேலும் இந்த நிலைமையை மோசமாக்கும்
குறட்டையை ஏற்படுவதை குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில வாழ்க்கை முறை டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் கழுத்தில் கூடுதல் எடை காற்றுப்பாதை அடைப்புக்கு பங்களிக்கிறது. சிறிய எடை இழப்பு கூட குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்
நீரேற்றமாக இருப்பது
நீர்ச்சத்து குறைவாக இல்லாமல் இருப்பதும் அவசியமானதாக உள்ளது. ஏனெனில் நீரிழப்பு தடிமனான சளிக்கு வழிவகுக்கும். இது குறட்டையை அதிகரிக்கிறது.
ஒவ்வாமைகளை நிர்வகிப்பது
ஒவ்வாமைகளை கட்டுப்படுத்துவது மற்றொரு பயனுள்ள உத்தியாகும், ஏனெனில் அவை நாசி நெரிசலுக்கு முக்கிய காரணமாகும்.
ஒவ்வாமைக்கு வெளிப்படுவதைக் கட்டுப்படுத்த காற்று சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஆண்டிஹிஸ்டமின்களை எடுத்துக்கொள்வது காற்றோட்டத்தை மேம்படுத்த உதவும்.
மதுபானங்களை தவிர்ப்பது
தூங்குவதற்கு முன் மதுபானம் மற்றும் மயக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்து உட்கொள்ளலைக் குறைப்பது குறட்டையை கட்டுப்படுத்துவதில் இன்றியமையாததாக உள்ளது.
ஏனெனில் இவை தொண்டை தசைகளை தளர்த்தும். இதனால் தனிநபர்கள் குறட்டைக்கு ஆளாக நேரிடும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை மேலும் மேம்படுத்தும்.
பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
டாபிக்ஸ்