வாழைப்பழத்தை காட்டிலும் அதிகம் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 01, 2024

Hindustan Times
Tamil

பொட்டாசியம் உடலுக்கு தேவையான அடிப்படை தாதுக்களகாவும், எலெக்ட்ரோலைட்களாகவும் இருக்கின்றன. இவை ரத்த அழுதத்தை சீராக்குகிறது. ஊட்டச்சத்து செல்களுக்கு கடத்தியாக செயல்படுகிறது. நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது

நாள்தோறும் பொட்டாசியம் தேவையை 9 சதவீதம் வரை ஒரு நடுத்தர அளவு வாழைப்பழம் பூர்த்தி செய்கிறது

வாழைப்பழம் தவிர பொட்டாசியம் நிறைந்திருக்கும் உணவுகளாக சீனிகிழங்கு, அவகோடா,பசலை கீரை என பல உணவுகள் இருக்கின்றன 

ஒரு கப் மசித்த சீனிகிழங்கு (328 கிராம்) 16 சதவீதம் அன்றாட பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்கிறது. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன

ஊட்டச்சத்துகள் அடர்த்தி நிறைந்த பழமாக இருக்கும் அவகோடா அன்றாட பொட்டாசியம் தேவையை 15 சதவீதம் வரை பூர்த்தி செய்கிறது. இதில் அதிகப்படியான வைட்டமின் கே மற்றும் போலேட்கள் நிறைந்துள்ளன

பொட்டாசியம், போலேட், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தாத பசலை கீரை உள்ளது

உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பானமாக இருக்கும் இளநீர், தேங்காய் தண்ணீர் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், மாங்கனீசு போன்ற சத்துக்களையும் தருகிறது

புத்துணர்ச்சியை தரும் பழமாக இருக்கும் தர்ப்பூசணியில் பொட்டாசியம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்ற இதர சத்துக்களும் உள்ளன

பொட்டாசியம் சத்துக்களின் சிறந்த ஆதாரமாக பீன்ஸ் உள்ளது. குறிப்பாக வெள்ளை பீன்ஸ்கலில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது

அனைவருக்கும் பிடித்தமான காய்கறியாக இருக்கும் உருளைக்கிழங்கு பொட்டாசியம் சத்து்க்கான சிறந்த ஆதாரமாக உள்ளது

சியா விதை தருகின்ற நன்மைகள்