Sapota Benefits: எலும்பு ஆரோக்கியம் ..சளி, காயச்சலில் விடுபட..! பருவ கால பழமாக இருக்கும் சப்போட்டா நன்மைகள்
எலும்பு ஆரோக்கியம் ..சளி, காயச்சலில் விடுபட..! பருவ கால பழமாக இருக்கும் சப்போட்டா நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
பார்ப்பதற்கு கொழு கொழுவென இருக்கும் சப்போட்டா பழத்தின் தோற்றம் பலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அவற்றால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொண்டால், நீங்களே விரும்பி சாப்பிடும் பழமாக உங்களை மாற்றிவிடும்.
சப்போட்டா பலரால் விரும்பி சாப்பிடும் பழமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதிலிலுள்ள இனிப்பு சுவை. அதேசமயம் அதன் தோற்றம் சிலருக்கு பிடிக்காத பழமாகவும் மாற்றிவடுகிறது. எது எப்படியாக இருந்தாலும் சப்போட்டாவில் உள்ள ஊட்டச்சத்துகள், அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கி, உடலில் வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
சப்போட்டா பழத்தை ஜூஸாக்கி குடித்தாலும், அப்படியே சாப்பிட்டாலும் சுவை அலாதியாக இருக்கும். எளிதில் செரிமானிக்கக் கூடிய இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி நீங்கள் சுவைத்து சாப்பிடும் சப்போட்ட மூலம் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
சப்போட்டாவில் இருக்கும் சத்துக்கள்
சப்போட்டாவில் உள்ள குளுகோஸ் நமக்கு ஆற்றலை தருகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் ரத்த நாளங்களை சீராக வைக்கவும், கொழுப்பை நீக்கவும் செய்கிறது. சப்போட்டாவைச் சாப்பிடுவது, சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். காச நோயால் பாதிக்கப்பட்டவர் சப்போட்டா பழச் சாற்றுடன் ஒரு நேந்திரம் பழம் சாப்பிட்டால் காச நோய் விரைவாக குணமாகும். சப்போட்டா பழச்சாறுடன் தேயிலைச் சாறும் சேர்த்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும், ரத்தக் கடுப்பு நிற்கும். சப்போட்டாவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், பிற செரிமான பிரச்சினைகளை சீராக்க உதவுகிறது.
தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் சப்போட்டாவில் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. சப்போட்டாவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அதைச் சாப்பிடுவது நம் உடல் நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும். சப்போட்டா பழத்தில், ஆன்டிபாக்டீரியல், ஆன்டி வைரல் பண்புகள் மிகுந்து காணப்படுவதால், ஜலதோஷம், பருவகால காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது.
ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். இதயத்துக்கு வலிமையைச் சேர்க்கிறது. சப்போட்டா பழம் சாப்பிடுவதால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் சப்போட்டாவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்போ வாயில் புண்ணோ ஏற்படலாம்.
சப்போட்டா சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள்
மலச்சிக்கலுக்கு நல்லது: சப்போட்டாவில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை போக்குகிறது
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு பண்பு: பெருங்குடல் புற்றுநோய், குடல் அழற்சி, டைவர்டிகுலிடிஸ் போன்ற குடல் சார்ந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் பண்புகளை கொண்டதாக சப்போட்டா பழம் உள்ளது
மூட்டு வலியை குறைக்கிறது: சப்போட்டாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், செரிமான மண்டலத்தில் பிரச்னை ஏற்படுவதை குறைக்கிறது. அத்துடன் வீக்கம் மற்றும் மூட்டு வலி பாதிப்புகளையும் வெகுவாக குறைக்கிறது
சளி மற்றும் இருமல் தொல்லையை போக்குகிறது: நாள்பட்ட இருமல் மற்றும் நெரிசலுக்கு சிறந்த மருந்தாக சப்போட்டா உள்ளது. மூக்கு மற்றும் சுவாஸப்பாதையில் தங்கியிருக்கும் சளியை நீக்குகிறது
எலும்பை வலுவாக வைக்க உதவுகிறது: சப்போட்டாவில் உள்ள தாதுக்களான கால்சீயம், பாஸ்பரஸ், இரும்பு போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையததாக உள்ளது. மேற்கூறிய அனைத்து சப்போடாவில் இருப்பதால் அவை எலும்புகளை வலுவாக்க உதவுகிறது
டாபிக்ஸ்