தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சின்ன சின்ன வீட்டுக்குறிப்புகள்தான்; இவற்றை பின்பற்றினால் சமையல், சமையலறை இரண்டும் சிறக்கும்!

சின்ன சின்ன வீட்டுக்குறிப்புகள்தான்; இவற்றை பின்பற்றினால் சமையல், சமையலறை இரண்டும் சிறக்கும்!

Priyadarshini R HT Tamil

Oct 15, 2024, 06:00 AM IST

google News
சின்ன சின்ன வீட்டுக்குறிப்புகள்தான்; இவற்றை பின்பற்றினால் சமையல், சமையலறை இரண்டும் சிறக்கும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
சின்ன சின்ன வீட்டுக்குறிப்புகள்தான்; இவற்றை பின்பற்றினால் சமையல், சமையலறை இரண்டும் சிறக்கும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சின்ன சின்ன வீட்டுக்குறிப்புகள்தான்; இவற்றை பின்பற்றினால் சமையல், சமையலறை இரண்டும் சிறக்கும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சமையல் ருசிக்க வேண்டுமெனில் நாம் சில குறிப்புகளை பின்பற்றினால் உங்கள் சமையலின் ருசி அதிகரிக்கும். சமைக்கும்போது சில சிறிய விஷயங்களே உங்கள் சமையலின் ருசியை அதிகரித்துவிடும். சமைப்பது மிகவும் கடினமான விஷயம். ருசியான சமையல் என்பது அதனினும் கடுமையானது. எனவே உங்கள் சமையல் ருசிக்க நீங்கள் சில குறிப்புகளை பின்பற்றவேண்டும். அப்போது உங்கள் சமையலின் ருசி அதிகரிக்கும். சமைக்கும்போது நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். இதன்முலம் உங்கள் சமையலின் ருசி மட்டும் மேம்படாது, சமையலறையில் சில பொருட்களின் சேதமும் குறையும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பாருங்களேன் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்கள் சமையலையும், சமையலறையையும் சிறக்க வைக்கும் குறிப்புகள் இதோ!

சாம்பார் மணக்க என்ன செய்யவேண்டும்?

மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை வறுத்து பொடித்து, இறக்குவதற்கு முன் இட்லி சாம்பாரில் சேர்த்தால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு வறுவல் சுவையானதாகவும், மொறுமொறுப்புடனும் இருக்க புளிப்பு இல்லாத கெட்டி தயிர் அரைக்கரண்டி சேர்க்கவேண்டும்.

ஒரு கடாயில் கடுகு, மஞ்சள் தூள், வர மிளகாய் சேர்த்து வறுத்து, அதை பொடியாக்கி, குழம்பில் தூவி இறக்கினால், நறுமணமிக்க குழம்பு கிடைக்கும்.

சப்பாத்தி சூடாக இருக்க அதை எப்போதும் சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவேண்டும்.

வர மிளகாயை தனியாக வறுக்கும்போது நெடி வந்து உங்கள் சுவாசத்தை பாதிக்கும். அதை தவிர்க்க, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வறுக்கவேண்டும்.

முட்டைகோசில் உள்ள தண்டை தூக்கி வீசாதீர்கள். அதை சாம்பாரில் சேர்க்கலாம். தண்டும் வீணாகாது, சாம்பாரும் ருசிக்கும்.

காய்கறிகள் வறுக்கும்போது பின்பற்றவேண்டியது என்ன?

காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

இட்லி வார்க்கும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சிறிது நேரம் வைத்துவிடவேண்டும். பின்னர் அந்த மாவில் இட்லி செய்தால், இட்லி மிருதுவாகவும், 2 நாட்கள் வரை கெடாமலும் இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கு இரண்டு எடுத்து வெட்டி அதில் போடவேண்டும். அந்த அதிகம் கரிக்கும் உப்பின் சுவை காணாமல் போய்விடும்.

கொத்தமல்லி இலைகளை ஆய்ந்து, நன்றாக தண்ணீரில் அலசி, காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும்.

இப்படி ஒரு ஹெல்தியான ஸ்னாக்ஸா?

உருளைக்கிழங்கு போண்டா செய்வதுபோல, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை நறுக்கி வதக்கி, அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் அதில் பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

ஃபில்டர் காபி பிரியர் என்றால், அதற்கு டிகாஷன் போடும் முன், சுடு தண்ணீரில் டிகாஷன் போட பயன்படுத்தும் பாத்திரத்தை ஊற விடவேண்டும். அப்போதுதான், அந்த துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து நன்றாக வளரும். அதை முகம் கழுவ பயன்படுத்தினால், முகமும் பளபளப்பாக இருக்கும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி