கம கமக்கும் மிளகு வறுவல் பிரியாணி செய்வது எப்படி! நா ஊறும் நச் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கம கமக்கும் மிளகு வறுவல் பிரியாணி செய்வது எப்படி! நா ஊறும் நச் ரெசிபி!

கம கமக்கும் மிளகு வறுவல் பிரியாணி செய்வது எப்படி! நா ஊறும் நச் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Oct 10, 2024 06:40 PM IST

உலகில் வாழும் பெரும்பான்மையான நாடுகளில் விருப்ப உணவாக பிரியாணி இருந்து வருகிறது. இந்தியாவிலும் அதுவே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வீட்டிலே விசேஷம் ஆனாலும், அலுவலகங்களில் ட்ரீட் என ஏதுவாக இருந்தாலும் பிரியாணி தான் உள்ளது.

கம கமக்கும் மிளகு வறுவல் பிரியாணி செய்வது எப்படி! நா ஊறும் நச் ரெசிபி!
கம கமக்கும் மிளகு வறுவல் பிரியாணி செய்வது எப்படி! நா ஊறும் நச் ரெசிபி! (swasthi's recipe)

தேவையான பொருட்கள்:

1 கப் பாஸ்மதி அரிசி

2 டீஸ்பூன் எண்ணெய்

2 பே இலைகள்

2 இலவங்கப்பட்டை

2 ஏலக்காய்

2 கிராம்பு

1 சிறிய ஜாதிபத்திரி

8 கப் தண்ணீர்

தேவையான உப்பு

முட்டை மிளகு வறுக்க:

1 டீஸ்பூன் மிளகு சோளம்

1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்

1 தேக்கரண்டி சீரகம்

4 டீஸ்பூன் எண்ணெய்

2 பே இலைகள்

2 இலவங்கப்பட்டை

2 ஏலக்காய்

2 கிராம்பு

1 சிறிய ஜாதிபத்திரி

2 வெங்காயம்

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

2 டீஸ்பூன் நெய்

1 டிஸ்பூன் கொத்தமல்லி தூள்

கொத்தமல்லி இலைகள்,

புதினா இலைகள்

 கறிவேப்பிலை

5-6 கடின வேகவைத்த முட்டைகள்

4 டீஸ்பூன் தயிர்

தேவையான உப்பு

செய்முறை 

முதலில் பாசுமதி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், ஜாதிபத்திரி ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின் ஊற வைத்த அரிசி மற்றும் தேவையான அளவு போட்டு வேக வைக்கவும். இதனை வடித்த வைத்துக் கொள்ளவும். பின் மிளகு வருவலை தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். பின் அதை மிக்சியில் போட்டு பொடியாக்கவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும். பின் அதே எண்ணெயில் ஒரு பட்டை, ஏலக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு ஆகியவற்றை போட்டு வறுக்கவும். மற்றொரு நறுக்கிய வெங்காயாயத்தை போட்டு வதக்கவும். 

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். பின்னர் அதில் 2 டீஸ்பூன் நெய் போட்டு வதக்கவும். பின் அரைத்து வைத்திருந்த மிளகு பொடியை சேர்க்கவும். பின் அதில் தயிரை சேர்க்கவும். மேலும் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி சேர்க்க வேண்டும். பின் ஒரு தக்காளியை லேசாக அரைத்து சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பை சேர்த்து சிறிது நேரம் காய விடவும். இதில் 6 முட்டைகளை வேக வைத்த எடுத்து பாதியாக வெட்டி சேர்க்கவும். பின்னர் இதில் வேக வைத்து எடுத்த சாதத்தை போடவும். பின்னர் ரோஸ்ட் செய்த வெங்காயம், நறுக்கிய புதினா, நெய் என வரிசையாக சேர்த்து மூடி வைக்கவும். மேலே தம் போடுவதற்கு கனமான பொருளை வைக்கவும். ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். பின் எடுத்து பரிமாறவும் சுவையான மிளகு வறுவல் பிரியாணி ரெடி. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.