Green Moong Dal Gravy: சப்பாத்திக்கு சூப்பர் சைட்டிஷ் பாசிப்பயறு கிரேவி! செம ரெஸிபி இதோ!
Green Moong Dal Gravy: அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள் என்றால் பல குழந்தைகளுக்கு பிடிக்காது. அதில உள்ள சத்துக்களை எடுத்தக் கூறினாலும் அந்த குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும்.
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள் என்றால் பல குழந்தைகளுக்கு பிடிக்காது. அதில உள்ள சத்துக்களை எடுத்தக் கூறினாலும் அந்த குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும். அவர்களது உடலுக்குத் தேவையான வலிமையை பெறுவதற்கு இது போன்ற பயறு வகைகளை தினம் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பாசிப்பயறில் உள்ள சத்தக்களை அறிந்து தான், இன்று இந்த பாசிப்பயறில் சுவையான கிரேவி செய்யும் முறையை பார்க்கலாம். இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, ரொட்டி, சூடான சோறு என எல்லாவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பாசிப்பயறு
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
3 பூண்டு பல்
1 இஞ்சி துண்டு
சிறிதளவு மஞ்சள் தூள்
சிறிதளவு சீரகம்
ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் மல்லி தூள்
1 டீஸ்பூன் சீரக தூள்
1 பிரிஞ்சி இலை
சிறிதளவு கொத்தமல்லி
சிறிதளவு மிளகாய் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் பாசிப்பயறை நன்கு கழுவி ஊற வைத்தக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட்டாக மாற்றிக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய், சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், அதில் சீரகம், பிரியாணி இலையை போட்டு வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விடவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதை நன்கு கலந்து விடவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் பச்சை பயரை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு வேக விடவும். இதனை ஒரு குக்கரில் போட்டும் வேக வைக்கலாம். குக்கரில் 5 முதல் 6 விசில் வரை வேக விட வேண்டும். நன்றாக வெந்ததும் அதில் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லியை தூவி விட்டு இறக்க வேண்டும். இதனை சப்பாத்தி, தோசை என எல்லாவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம். இதனை உங்கள் வீடுகள் டிரை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் அனைவருக்கும் கொடுத்து அசத்துங்கள். மிகவும் சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
டாபிக்ஸ்