தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உலக தண்டுவட தினத்தின் முக்கியத்துவம்; கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

உலக தண்டுவட தினத்தின் முக்கியத்துவம்; கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 16, 2024, 06:00 AM IST

google News
உலக தண்டுவட தினத்தின் முக்கியத்துவம், கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். தண்டுவட ஆரோக்கியத்தை வலியுறுத்த உங்கள் தண்டுவடத்துக்கு ஆதரவு கொடுங்கள்.
உலக தண்டுவட தினத்தின் முக்கியத்துவம், கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். தண்டுவட ஆரோக்கியத்தை வலியுறுத்த உங்கள் தண்டுவடத்துக்கு ஆதரவு கொடுங்கள்.

உலக தண்டுவட தினத்தின் முக்கியத்துவம், கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். தண்டுவட ஆரோக்கியத்தை வலியுறுத்த உங்கள் தண்டுவடத்துக்கு ஆதரவு கொடுங்கள்.

அக்டோபர் 16ம் தேதி உலக தண்டுவட தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தண்டுவடம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தண்டுவடத்தின் வலி மற்றும் செயல்திறனை இழக்கும் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. உலக தண்டுவட தினம் பல்வேறு பின்புலத்தில் இருந்தும் தனிநபர்களை ஒருங்கிணைக்கிறது. சுகாதார ஊழியர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் அரசு, பொதுமக்கள் என அனைவரையும் இணைக்கிறது. கண்டங்கள் கடந்து அனுசரிக்கப்படுகிறது. தண்டுவட ஆரோக்கியத்தின் உலகளாவிய முக்கியத்துவம் குறித்து இந்த நாள் வலியுறுத்துகிறது.

இந்தாண்டு, இந்த நாளில் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய வலிகள் மற்றும் செயலிழப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அனைத்து வயதினரிடையேயும், தேசங்கள் கடந்தும் ஆதார அடிப்படையிலான திட்டங்களை வகுத்து, தண்டுவட ஆரோக்கியத்தை காக்கிறது. இந்தாண்டு உங்கள் தண்டுவடத்துக்கு ஆதாரவு கொடுங்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு பச்சை, ஊதா நிற ரிப்பன் அடையாளமாக உள்ளது.

முக்கியத்துவம்

2020ம் ஆண்டு பின்புற வலி உலகம் முழுவதும் 619 மில்லியன் மக்களை தாக்கியது. 2050 இந்த எண்ணிக்கை 843 மில்லியனாக உயரும் என்று உள்ளது. இதற்கு மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வயோதிகம் காரணமாகலாம்.

உலகம் முழுவதிலம், பின்புற வலிதான் செயல்திறன் இழப்புக்கு காரணமாக, இதனால் மறுவாழ்வு வழிகள் எண்ணற்ற அளவிலான மக்களுக்கு நன்மையைத் தந்தது.

பின்புற தண்டுவட வலி என்பது எந்த வயதினருக்கும் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஏற்படக்கூடிய ஒன்று.

இது 80 வயதுவரை வரும். அதிக எண்ணிக்கையில் 50 முதல் 55 வயது உடையவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு இந்த எண்ணிக்கை அதிகம்.

பின்புற தண்டுவட வலி பொதுவான ஒன்றாகும்.

நாடுகள்

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள எண்ணற்ற நாடுகளில், சுகாதாரம் மற்றும் தண்டுவடத்திற்கான சிறப்பு மருத்துவர்கள் இல்லாதது அவலநிலைதான். எனவே மக்களிடம் அவர்களின் நிலையை தாங்களாவே சமாளித்துக்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். எனினும், பின்புற தண்டுவட வலி என்பது, தொழிலாளர்களிடம் கணிசமான அளவில் இருந்தது. அதிக வருமானம் கொண்ட நாடுகளிலும், முக்கியத்துவம் மற்றும் அதை சமாளிக்கவும், தடுக்கவும் நடவடிக்கைகளை சிறப்பாக எடுக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலத தண்டுவட தினம் தண்டுவட வலி மற்றும் செயல்திறன் இழப்பு ஏற்படுவது குறித்து அரசுகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தண்டுவட நிபுணர்களுக்கு இந்த நிகழ்வுகள் நல்வாய்ப்புக்களை வழங்குகிறது. எனவே அதில் கலந்துகொண்டு அர்த்தமுள்ள பங்களிப்பை நல்கவேண்டும்.

உங்கள் தண்டுவடத்துக்கு ஆதரவு

உங்கள் தண்டுவடத்துக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என அனைவருக்கும் இந்த நாள் அழைப்புவிடுக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தண்டுவட ஆரோக்கியம் முக்கியம் என்றும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. வீடு, பணியிடம், பள்ளி என அனைத்து இடங்களிலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைபிடிக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். உங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தண்டுவடத்தை காப்பது அவசியம்.

அனைத்து பின்னணி கொண்வர்களும், தொடர்ந்து ஓரிடத்தில் நீண்ட நேரம் உடல் செயல்பாடின்றி அமர்ந்திருக்க கூடாது, தண்டுவடத்தில் அதிக சுமையை ஏற்றக்கூடாது, தண்டுவடத்தின் ஆரோக்கியத்தை காப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கூடுதலாக ஆரோக்கியமான வாழ்வியல் முறை சார்ந்த பழக்கவழக்கங்களை பின்பற்றவேண்டும். உடல் எடை குறைப்பு மற்றும் புகை பிடிப்பதை தவிர்ப்பது போன்றவை தண்டுவட ஆரோக்கியத்துக்கு குறிப்பிட்ட அளவில் பங்களிக்கிறது. எனவே உங்கள் தண்டுவடத்துக்கு ஆதரவு கொடுக்க இந்த நாளில் வலியுறுத்தப்படுகிறது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி