Samantha: சைதன்யா குடும்பத்திற்கு சம்பவம் செய்த சமந்தா.. வாழ்நாளில் மறக்கவே மாட்டாங்க.. செய்யாறு பாலு சொன்ன தகவல்..
Samantha: சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை சோபிதாவை திருமணம் செய்ய உள்ள நிலையில், சமந்தா சைதன்யா குடும்பத்திற்கு செய்த தரமான சம்பவம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
நடிகை சமந்தா- நாக சைதன்யா ஜோடி விவாகரத்து செய்ததை இன்றுவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களது ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சமந்தா உடல் நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்மேல் ரசிகர்களுக்கு மேலும் பரிதாபம் தொற்றிக் கொண்டது. பின் திருமண வாழ்க்கையிலிருந்தும், உடல்நலப் பிரச்சனைகளில் இருந்தும் மீண்டவரை மேலும் அவதிக்குள்ளாக்கியது சைதன்யாவின் நிச்சயதார்த்தம்.
இதனால், தமிழ், தெலுங்கு ரசிகர்கள் பலரும் நாக சைதன்யாவை விமர்சித்தும் சமந்தாவை ஆதரிக்கவும் தொடங்கினர்.
இந்த சமயத்தில் தான் தன்னை நோகச் செய்த நாக சைதன்யா குடும்பத்திற்கு வாழ்க்கையில் மறக்க முடியாதபடி சமந்தா பதிலடி ஒன்றை கொடுத்துள்ளதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
சினிமா எண்ட்ரி
தமிழ் ரசிகர்ளின் மனங்களில் காதல் திரைப்படம் என்றால் இதுதான் என முத்திரை குத்திய படங்களில் ஒன்று தான் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் சமந்தா. பின் இதே படத்தின் தெலுங்கு வெர்ஷனில் திரிஷாவிற்கு பதிலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாக சைதன்யா.
திருமணம்- விவாகரத்து
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் காதல் வலையில் விழுந்தனர். பின் இருவரும் அவர்கள் கெரியரை பார்த்துக் கொண்டே காதலர்களாக வலம் வந்தனர். இதற்கிடையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கியிருந்தார்.
பின் சமந்தாவும்- நாக சைதன்யாவும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னும் இருவரும் சினிமாவில் நடித்து வரத் தொடங்கிய நிலையில், சமந்தா ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் நடிகையாக உருவெடுத்தார்.
அந்த சமயத்தில் நாக சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது. இந்தத் தகவல்கள் மீடியாவில் கசியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கூட்டாக அறிவித்தனர். இது அவர்களது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சமந்தா மீண்டும் கெரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
டாப் கியரில் கெரியர்
ஆனால், சில நாட்களிலேயே அவர் மையோசிடிஸ் எனும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். காதல் கணவரின் பிரிவும் நோயும் ஒருசேர சமந்தாவை தாக்கிய நிலையில், தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்காக சோகத்தில் மூழ்கினர்.
பின், சிகிச்சைக்காக சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வெடுத்து வந்தார். பின், சிகிச்சை முடிந்து நடிப்பைத் தொடங்கிய சமந்தா தற்போது டாப் கியரில் பறந்து வருகிறார். இவர் தற்போது திரைப்படங்களைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறார். தனது அடுத்தடுத்த சினிமா பயணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.
சந்தோஷத்தை கண்டுபிடித்தோம்
மறுபுறம், சமந்தாவை விவாகரத்து செய்த பின் நாக சாதன்யா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமான சோபிதா துலிபாலாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் அவரை நிச்சயதார்த்தமும் செய்துள்ளார். இதனால், தனது மகனின் சந்தோஷம் என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் எனவும் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜூனா கூறியிருந்தார்.
செய்யாறு பாலு கூறிய ரகசியம்
இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், இவர்களின் விவாகரத்து சமயத்தில் நடந்த செய்தியை பேட்டி ஒன்றின் போது கூறி சமந்தாவை பெருமைபடுத்தியுள்ளார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இதுகுறித்து அவர் பேசும்போது, சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்யும் போது, சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு ஹைதராபாத்தில் 45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வீடும் இன்னும் பல சொத்துக்களும் இருந்தனவாம். இதனை கைப்பற்றும் பொருட்டே சமந்தா சைதன்யாவை விவாகரத்து செய்தார். அப்போது ஜீவனாம்சமாக பல கோடிகளை கேட்க நினைத்துள்ளார் என பலதகவல்கள் பரவியது.
அந்தத் தகவல்களையும் வதந்திகளையும் தவிடுபொடி ஆக்கும்படியாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்திடமிருந்து ஒரு பைசா கூட தனக்கு வேண்டாம் எனக் கூறி, தன்னை இழிவுபடுத்தியவர்கள் முன் தனித்து நின்று ஜெயித்து வருகிறார் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த செயலை சைதன்யா குடும்பம் வாழ்நாளில் மறக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.