Sex Health : உடலுறவு ஆசைக்கு மட்டுமா.. ஆரோக்கியத்திற்கும் தான்.. அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் இத்தனை பலன்களா?
Oct 03, 2024, 05:50 AM IST
Sex Health : இன்றைய சூழலில் பணி கலாச்சாரம் காரணமாக பலருக்கும் மன அழுத்தம் பெரிய பிரச்சனையாக உள்ளது. இயற்கையான உடலுறவில் ஈடுபடுவது பலருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும். நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. உடலுறவின் போது, உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது ஒரு நல்ல உணர்வை அளிக்கிறது.
Sex Health : இன்றைய இளம் தலைமுறையினரிடையே பணிச்சூழல், அதிகப்படியான செல்போன் பயன்பாடு, குடும்பசூழல், பொருளாதார அழுத்தம் காரணமாக உடலுறவில் ஈடுபடும் நேரம் வெகுவாக குறைந்து வருகிறது. பலரிடையே உடலுறவின் மீதான ஆர்வமும் குறைந்து வருவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் முறையான உடற்பயிற்சி, உணவு மற்றும் உடலுறவும் இணையும் போது நமது ஆரோக்கியம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது. ஆம் வாழ்க்கைத் துணையுடன் வழக்கமான உடலுறவு நமக்கு நன்மைகளைக் தரவல்லது. அடிக்கடி பாலுறவில் ஈடுபடுவது ஆண்களுக்கும்,பெண்களுக்கும் சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. உடலுறவு கொள்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது என்று சிலர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, உடலுறவு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வழக்கமான உடலுறவின் 8 ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்
உணர்ச்சி பிணைப்பை மேம்படுத்துதல்
வாழ்க்கைத் துணைவர்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் அவர்களுக்கு இடையே உள்ள உணர்ச்சிப் பிணைப்பு வலுவடைகிறது. உணர்ச்சி தொடர்பு மேம்படும். காதல் ஹார்மோன் எனப்படும் ஆக்ஸிடாசின் உடலுறவின் போது வெளியாகும். இது ஒருவருக்கொருவர் அன்பை அதிகரிக்க உதவுகிறது. வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையேயான பிணைப்பை வலுவாக வைத்திருக்க அடிக்கடி உடலுறவு கொள்வது ஒரு சிறந்த வழியாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தம்பதியினரிடையே புரிதல் அதிகரிப்பதோடு காலப்போக்கில் சண்டைகள் குறையும்
இதயத்திற்கு நல்லது
வழக்கமான உடலுறவு இதயத்திற்கும் பயிற்சி அளிக்கிறது. உடலுறவின் போது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும்
உடலுறவு நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. பாலியல் தூண்டுதல் இம்யூனோகுளோபுலின் ஏ (IgA) உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தொற்றுநோய்களிலிருந்து உடல் நலத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது
இன்றைய சூழலில் பணி கலாச்சாரம் காரணமாக பலருக்கும் மன அழுத்தம் பெரிய பிரச்சனையாக உள்ளது. இயற்கையான உடலுறவில் ஈடுபடுவது பலருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும். நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. உடலுறவின் போது, உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது ஒரு நல்ல உணர்வை அளிக்கிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கும்.
வலிகளில் இருந்து நிவாரணம்
உடலுறவின் போது எண்டோர்பின்களின் வெளியீடு சில வகையான உடல் வலிகளில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. உடலுறவு கொண்ட பிறகு, பலருக்கு தலைவலி போன்ற வலிகளில் இருந்து சிறிது தளர்வு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தூக்கம் மேம்பாடு
தூக்க மின்னை இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேசமயம் வழக்கமான பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நன்றாக தூங்குகிறார்கள் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உடலுறவின் போது எண்டோர்பின்கள் வெளியாவதால் மனதுக்கு நிம்மதியும், நல்ல தூக்கமும் கிடைக்கும். இதனால் அடிக்கடி உடலுறவு கொள்வது தூக்கமின்மை பிரச்சனையை குறைக்கும்.
தசை வலிமை
பெண்களின் கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல்களை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இடுப்பு தசைகளின் வலிமையை அடிக்கடி உடலுறவு அதிகரிக்கிறது.
ஞாபகசத்தியை அதிகரிக்கும்
பாலுறவில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்களுக்கு வயதாகும்போது ஞாபக சக்தி அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆண்களுக்கும் இந்த நன்மை இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
ஆரோக்கியம் தொடர்பாக தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.