தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காய்ச்சல், சளிக்கு நீங்களாகவே மருந்து எடுத்து கொள்வதில் எவ்வளவு ஆபத்து பாருங்க..மருத்துவர் விளக்கம்

காய்ச்சல், சளிக்கு நீங்களாகவே மருந்து எடுத்து கொள்வதில் எவ்வளவு ஆபத்து பாருங்க..மருத்துவர் விளக்கம்

Nov 22, 2024, 09:24 AM IST

google News
சுய மருந்துகளின் ஆபத்துகள் என்ன என்று ஒரு மருத்துவர் கூறினார். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? மேலும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சுய மருந்துகளின் ஆபத்துகள் என்ன என்று ஒரு மருத்துவர் கூறினார். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? மேலும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சுய மருந்துகளின் ஆபத்துகள் என்ன என்று ஒரு மருத்துவர் கூறினார். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? மேலும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சில வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு பலரும் சொந்தமாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். சிலர் சின்ன சின்ன உடல் நல பிரச்சனைகள் வரும் போது ஆயுர்வேத முறையில் உணவு பொருட்களை பயன்படுத்தலாம். ஆனால் நீங்களாக அலோபதி மருந்துகளை வாங்கி உட்கொள்வது சில நேரங்களில் சிக்கலுக்கு கொண்டு செல்லும். சிலர் எந்த ஒரு சின்ன பிரச்சனைகளையும் டாக்டர்களிடம் சென்று பார்ப்பதில்லை. மெடிக்கல் ஷாப் சென்று யாரோ பரிந்துரைத்த மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர். அல்லது இணையத்தில் பார்த்ததை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை பயன்படுத்தினால் அது உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி பிரச்சனை அதிகரிக்கும். இதில் உள்ள  அபாயம் குறித்து மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கு விரிவாக பார்க்காலாம்.

தவறான மருந்தை உட்கொள்வதால் ஆபத்து

தபஸ் குமார் கோல், எம்.டி., இன்டர்னல் மெடிசின், ஆலோசகர், மணிப்பால் மருத்துவமனைகள், மக்கள் தங்கள் சொந்த மருந்துகளைப் பயன்படுத்துவதைப் பற்றி HT லைஃப்ஸ்டைலிடம் பேசினார். அவர் சுயமருந்துகளால் நோய் தவிர தவறான மருந்துகளை உபயோகிக்கும் அபாயம் உள்ளது என்றார். “டாக்டரைக் கலந்தாலோசிக்காவிட்டால், என்ன பிரச்சனை என்று சரியாகத் தெரியாது. சம்பந்தமில்லாத ஒன்று குணமாகி விட்டது போல தோன்றும். ஆனால் இது நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்,” என்றார் தபஸ்.

இந்த சிக்கல்களில் பெரும்பாலானவை

சிலர் சிகிச்சைக்கு அதிக பணம் செலவழிக்க விரும்பாததால் மருத்துவர்களிடம் செல்வதில்லை. தாங்களாகவே  மருந்துகளை எடுத்து பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை தபஸ் வெளிப்படுத்தினார். "சமூக ஊடகங்கள், இணையம் மற்றும் தங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் சிறிய அறிகுறிகளை எளிதில் தள்ளி விடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இதுவே பல உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக மாறும் ஆபத்து உள்ளது. இது குறித்து டாக்டர் தபஸ் கூறுகையில், “அவர்கள் உடலில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்கொள்கிறார்கள்” என்றார்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்தினால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் தபஸ் தெரிவித்தார். “மருந்துகள், லேபிள்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படிக்க வேண்டும். ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும். சரியான அளவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆபத்தைக் குறைக்க, பாதுகாப்புக்காக மருந்துகளை வாங்கும் போது மருந்தாளரிடம் இருந்து முழுமையான விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தபஸ் கூறினார்.

சுய மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து மருத்துவ சமூகம் மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று தபஸ் கருத்து தெரிவித்துள்ளார். பிரச்சனையை மோசமாக்குவதை விட மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய நிபுணர்களை அணுகுமாறு மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். பொது மக்கள் மருந்துகளை சுயமாக பயன்படுத்துவதை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மருத்து கடைகளில் நேரடியாக மருந்து கொடுப்பதைத் தடை செய்வது முக்கியம் என்று டாக்டர் தபஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி