உஷார்..! குடல் பாதிப்பு முதல் எடை அதிகரிப்பு வரை..காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உஷார்..! குடல் பாதிப்பு முதல் எடை அதிகரிப்பு வரை..காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?

உஷார்..! குடல் பாதிப்பு முதல் எடை அதிகரிப்பு வரை..காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 20, 2024 07:59 PM IST

குடல் பாதிப்பு முதல் எடை அதிகரிப்பு வரை அளவுக்கு அதிகமாக காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

உஷார்..! குடல் பாதிப்பு முதல் எடை அதிகரிப்பு வரை..காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
உஷார்..! குடல் பாதிப்பு முதல் எடை அதிகரிப்பு வரை..காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?

வாயில் நெருப்பு எரிவது போன்ற உணர்வு, உதடுகளில் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவை பச்சை மிளகாய் அல்லது மிளகு போன்ற காரமான உணவை சாப்பிட்டவுடன் ஏற்படும் பக்க விளைவுகளாக இருக்கின்றன. இது தவிர காரமான உணவுகளால் உடலுக்குள்ளும் நீங்கள் அறியாத பல விஷயங்கள், பாதிப்புகள் ஏற்படுகின்றன.

காரமான உணவின் பல ஆபத்துகள் உள்ளன. இது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உடலில் இருக்கும் புண்களை மேலும் மோசமாக்கும். தலைவலி, குமட்டல் போன்ற பிரச்னைகளை கூட ஏற்படுத்தலாம். சில உணவு கலாச்சாரங்களில் காரமான உணவு மிகவும் முக்கியமானது என்றாலும், மசாலா அளவை பயன்படுத்தாதவர்களுக்கு, காரமான உணவுகள் பெரும்பாலும் வலிமிகுந்த தேர்வாக மாறும். காரமான உணவுகள் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்

உணவை காரமாக மாறுவது எப்படி?

பொதுவாக, காரமான உணவுகளில் கேப்சைசின் எனப்படும் உயிர்வேதியியல் கலவை உள்ளது. "இந்த கலவை உங்கள் வாயில் உள்ள ஏற்பிகளை நீங்கள் கடிக்கும் போது எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது" என்று ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார்கள். நமது உடலில், தோல்களில், வாயை சுற்றி பல ஏற்பிகள் உள்ளன. இவை வெப்பத்துக்கு எதிர்கொள்ளும்போது செயல்படும். கேப்சைசின் இந்த ஏற்பிகளைத் தூண்டுகிறது, இதன் காரணமாகவே பச்சை மிளகாயை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரைப் பெற நம்மை ஓட வைக்கிறது. இந்த ஏற்பிகள் தூண்டப்பட்டால், அது நம் வாய், தோல் மற்றும் வயிறு மற்றும் கண்களைச் சுற்றி எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால்தான் மிகவும் காரமான உணவுகள் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். உண்மையில், கேப்சைசின் மீண்டும் மீண்டும் தூண்டப்படுவது நாள்பட்ட தேய்மானத்தை ஏற்படுத்தும்.

காரமான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்

மிளகாய் போன்ற காரமான உணவுகளை உட்கொள்வது உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், அவற்றை மிதமாக உட்கொள்வது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. தீவிர மசாலா பொருள்கள், காரமான உணவுகள் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்

இரைப்பை குடல் பாதிப்பு

அதிக அளவு காரமான உணவுகளை நீண்ட நேரம் உட்கொள்வது நெஞ்செரிச்சல் அல்லது பிற இரைப்பை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கேப்சைசின் தூண்டப்படுவது குமட்டல் உணர்வு மற்றும் வயிற்று வலியைத் தவிர வயிற்றில் படபடப்பு போன்ற உணர்வுகள் ஏற்படுத்தும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இரைப்பை அழற்சி அல்லது புண்களை மோசமாக்கலாம்

காரமான உணவுகள் நேரடியாக இரைப்பை அழற்சி அல்லது புண்களை ஏற்படுத்தாது என்று ஆய்வு கூறுகிறது. இருப்பினும், உங்களுக்கு ஏற்கனவே இதுபோன்ற நிலைமைகள் இருந்தால், அது அவற்றை மேலும் மோசமாக்கலாம். எனவே, இந்த மருத்துவ நிலைகளில் இருப்பவர்களஅ காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

எடை அதிகரிப்பு

மசாலா பொருட்கள் பொதுவாக உடல் எடையைக் குறைக்கும் பண்புகளை கொண்டிருந்தாலும், இறைச்சியை அடிப்படையாகக் கொண்டு மசாலாக்கள் அதிகமாக நுகர்வு செய்தால் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். மேலும், காரமான உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பை, அதனால் ஏற்படும் எரிச்சலில் இருந்து விடுபட இனிப்பு உட்கொள்ள வேண்டும் என்ற ஆசை நீண்ட காலத்துக்கு உங்கள் எடையை பாதிக்கும். ஒரு சில மசாலாப் பொருட்கள், மிதமான அளவில் சாப்பிடுவதன் மூலம் ​​சர்க்கரை அளவு அதிகரிப்பு, பசி உணர்வை கட்டுப்படுத்தலாம்.

வயிற்றுப்போக்கு ஏற்படலாம்

நீங்கள் ஆரம்பத்தில் மிகவும் காரமான உணவை உட்கொள்ளும்போது உங்கள் வாயில் நெருப்பு எரிவதை நீங்கள் உணர்ந்தாலும், உணவு உங்கள் இரைப்பைக் குழாயில் சென்றவுடன், அது செரிமான விகிதத்தை அதிகரிக்கும். இது வயிற்றுப்போக்கு மற்றும் வலிமிகுந்த குடல் அசைவுகளுக்கு வழிவகுக்கும்.

தலைவலிக்கு வழிவகுக்கும்

மிகவும் காரமான உணவை உட்கொண்ட பிறகு சிலருக்கு இடி இடிப்பது போன்ற உணர்வை தரும் தலைவலி ஏற்படலாம். இது வலியுடையது மற்றும் திடீரென்று வரும் தலைவலி வகையாக உள்ளது. உலகின் மிக வெப்பமான மிளகாயை உட்கொண்ட ஒரு நபருக்கு கடுமையான தலைவலி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடியுடன் கூடிய தலைவலியை சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது, மனிதனின் மூளையின் தமனிகள் வழக்கத்தை விட குறுகலாக இருப்பதைக் காட்டியுள்ளது. இரத்த ஓட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் போது இடி தலைவலி வரும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.