இயற்கையான முறையில் டைப் 2 டயபிடிஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் என்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 20, 2024
Hindustan Times Tamil
டைப் 2 டயபிடிஸ் பாதிப்பு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு ஆபத்துகளையும், விளைவுகளையும் ஏற்படுத்தும்
டைப் 2 டயபிடிஸை கட்டுப்படுத்த நிதானம், ஒழுக்கத்தையும் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்
முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் சரி விகிதத்தில் உணவு டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்கும்
ஸ்டார்ட்ச் அல்லாத உணவுகளான பசலை கீரை, கேலே, ப்ரோக்கோலி போன்று குறைவான கார்ப்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும்
இறைச்சி சாப்பிட விரும்பினால் மெலிதான இறைச்சிகள், மீன் போன்றவற்றை சாப்பிடலாம். புரதம் நிறைந்து, அடிப்படை ஊட்டச்சத்துகள் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்
ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். அவகோடா, நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் போன்றவை ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தும்
வழக்கமான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்வதன் மூலம் இன்சுலின் உணர்திறன் மேம்படுத்தப்பட்டு ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்