Samai Adai : அடடா சத்தான அடைடா! சாமையில் செய்வது! உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்க!
Mar 30, 2024, 07:11 AM IST
Samai Adai : ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. உடலின் கழிவுநீக்கத்துக்கும் உதவுகிறது. உடலுக்கு இயற்கையாக சக்தியை அளிக்கிறது. உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. உங்கள் உணவில் இதை தினமும் சேர்த்துக்கொண்டால் அது உங்களுக்கு சிறப்பான பலனை தரும்.
தேவையான பொருட்கள்
சாமை அரிசி – ஒரு கப்
கடலைப்பருப்பு – அரை கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
மிளகாய் வற்றல் – 5
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – அரை இன்ச்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
துருவிய கேரட் – கால் கப்
தேங்காய்த்துருவல் – கால் கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சாமை அரிசி, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ளவேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 முதல் 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்தவற்றை சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். மிக்ஸி ஜாரை முக்கால் தண்ணீர்விட்டு அலசி மாவில் கலக்கவேண்டும். பின் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
இரும்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து காயவைத்து ஒன்றரைக் கரண்டி மாவை ஊற்றி மெதுவாக தேய்த்து விடவேண்டும்.
அடையைச் சுற்றியும், மேலேயும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு மிதமான சூட்டில் வேகவிடவேண்டும். கீழ் புறம் சிவந்து வெந்ததும் மெதுவாக திருப்பிப் போட்டு மேலும் சில நிமிடங்கள் முறுகலாகும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும் அனைத்து மாவையும் இதுபோல் அடைகளாக வார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூடாக தேங்காய், தக்காளி சட்னி, அவியல், கெட்டி சாம்பார், கிரேவி என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். அசைவ குழம்புகளும், இதற்கு சரியான ஜோடிதான்.
சாமையில் உள்ள நன்மைகள்
சாமையில் 378 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 60.9 கிராம், புரதம் 9.7 கிராம், கொழுப்பு 5.2 கிராம், நார்ச்சத்து 7.6 கிராம், கால்சியம் 17 மில்லி கிராம், இரும்புச்சத்து 9.3 கிராம், தயாமின் பி1-0.30, ரிபோஃப்ளாவின் 0.09 மில்லி கிராம், நியாசின் 3.2 மில்லி கிராம்.
சாமை குளுக்கோஸை உடலில் மெதுவாக உயர்த்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்த சர்க்கரை பராமரிக்க உதவுகிறது. இது உடலுக்கு சீரான சத்தை வழங்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்கிறது. எனவே சர்க்கரையை முறையாக பராமரிக்க சாமை பயன்படுகிறது.
நார்ச்சத்து
சாமையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை அதிகரிக்கிறது. சிறப்பான குடலியக்கத்துக்கு வழிவகுத்து, மலச்சிக்கலை தடுக்கிறது. குளூட்டன் இல்லை
இதில் இயற்கையிலே குளூட்டன் இல்லை. குளூட்டன் அழற்சி உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கோதுமை போலன்றி பார்லி, கம்பு மற்றும் சாமையில் இயற்கையிலேயே குளுட்டன் இல்லை.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
சாமையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மனஅழுத்தத்தில் இருந்து உங்களை காக்கிறது.
செரிமானத்துக்கு சிறந்தது
இதில் உள்ள நார்ச்த்து செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான செரிமானத்துக்கு வழிவகுக்கிறது. ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. உடலின் கழிவுநீக்கத்துக்கும் உதவுகிறது. உடலுக்கு இயற்கையாக சக்தியை அளிக்கிறது. உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. உங்கள் உணவில் இதை தினமும் சேர்த்துக்கொண்டால் அது உங்களுக்கு சிறப்பான பலனை தரும்.
டாபிக்ஸ்