Benefits of Little Millet : தினம் ஒரு தானியம் அறிவோம்! சத்துக்களை அள்ளித்தரும் சாமையில் இத்தனை நன்மைகளா?
Benefits of Little Millet : தினம் ஒரு தானியம் அறிவோம்! சத்துக்களை அள்ளித்தரும் சாமையில் இத்தனை நன்மைகளா?
சாமையில் 378 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 60.9 கிராம், புரதம் 9.7 கிராம், கொழுப்பு 5.2 கிராம், நார்ச்சத்து 7.6 கிராம், கால்சியம் 17 மில்லி கிராம், இரும்புச்சத்து 9.3 கிராம், தயாமின் பி1-0.30, ரிபோஃப்ளாவின் 0.09 மில்லி கிராம், நியாசின் 3.2 மில்லி கிராம்.
சாமை உடலுக்கு குளுக்கோஸை குறைவாக உடலில் உயர்த்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்த சர்க்கரை பராமரிக்க உதவுகிறது. இது உடலுக்கு சீரான சத்தை வழங்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்கிறது. எனவே சர்க்கரையை முறையாக பராமரிக்க சாமை பயன்படுகிறது.
நார்ச்சத்து
சாமையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை அதிகரிக்கிறது. சிறப்பான குடலியக்கத்துக்கு வழிவகுத்து, மலச்சிக்கலை தடுக்கிறது. கூடுதலாக இது ஆரோக்கியமான குடலுக்கு வழிவகுக்கிறது. கழிவை சிறப்பாக வெளியேற்றிவிடுகிறது. சாமையை உங்கள் உணவில் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு வாயுத்தொல்லையே ஏற்படாது.
குளூட்டன் இல்லை
இதில் இயற்கையிலே குளூட்டன் இல்லை. குளூட்டன் அழற்சி உள்ளவர்களுக்கு இது சிறந்தது. குளூட்டன் இல்லாத உணவுகளை சாமையுடன் கலந்து சாப்பிடலாம். இது கோதுமை போன்ற தானியங்களுக்கு மாற்றாக ஊட்டச்சத்தை வழங்கக்கூடியது. குளுட்டன் ஒவ்வாதவர்களுக்கு இதிலிருந்து பல்வேறு உணவுகள் கிடைக்கிறது.
கோதுமை போலன்றி பார்லி, கம்பு மற்றும் சாமையில் இயற்கையிலேயே குளுட்டன் இல்லை. குளூட்டன் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் சாமையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு செரிமானத்திற்கும் சிறந்தது. சாமையில் பல்வேறு வகை உணவுகளை சுவையை தியாகம் செய்யாமல் ஊட்டச்சத்துக்களுடன் சாப்பிட்டு மகிழலாம். செரிமானம் மற்றும் மலச்சிக்கலையும் போக்குகிறது. குளுட்டன் இல்லாத மற்றும் சரிவிகித உணவுக்கு சாமையை உங்கள் சமையலறைக்கு கொண்டு வாருங்கள்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
சாமையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மனஅழுத்தத்தில் இருந்து உங்களை காக்கிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்கள் மற்றும் திசுக்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கிறது. சாமை, புற்றுநோயை தடுக்கிறது. இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. நரம்பியல் கோளாறுகளை சரிசெய்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது.
செரிமானத்துக்கு சிறந்தது
இதில் உள்ள நார்ச்த்து செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான செரிமானத்துக்கு வழிவகுக்கிறது. செரிக்காத நார்ச்சத்து, வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. உடலின் கழிவுநீக்கத்துக்கும் உதவுகிறது. உடலுக்கு இயற்கையாக சக்தியை அளிக்கிறது. உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. உங்கள் உணவில் இதை தினமும் சேர்த்துக்கொண்டால் அது உங்களுக்கு சிறப்பான பலனை தரும்.
டாபிக்ஸ்