Kadalai Paruppu Thuvaiyal: காய்கறி விலை அதிகரித்துள்ளதா கவலை வேண்டாம் அதான் கடலைப்பருப்பு இருக்கே!
கடலை பருப்பு உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல், உடல் எடையை குறைக்க, தலைமுடி உதிர்வை தடுக்க என பல நன்மைகளை கொடுக்கும்.
தற்போதைய சூழலில் தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், என நாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தனை காய்கறிகளும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த நிலையில் நம் வீட்டில் செய்யும் கஞ்சி, லெமன்சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் என இப்படி பல சாதங்களுக்கு சரியான காமினேசனான இந்த பருப்பு துவையலை செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். இது பேச்சுலர் பசங்களுக்கு எளிதில் செய்யக்கூடிய அட்டகாசமான சைடுடிஷ் ஆக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 கப்
வத்தல் -5
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு- 5 பல்
தேங்காய்
உப்பு
கடலை எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை
கடலைப்பருப்பை வாணலியில் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். இதில் சிறிது கடலை எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுத்த பின் ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற விட வேண்டும். பின்னர் லேசாக எண்ணெய் விட்டு வத்தல், பூண்டு, புளி, தேங்காய், 2 கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும்.
பின் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்த கொர கொரப்பாக துவையல் பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் விரும்பம் உடைய வர்கள் தண்ணீர் கலந்து சட்னியாக மாற்றி கடுகு உளுந்து சின்ன வெங்காயம் கறி வேப்பிலை கலந்து தாளித்து இட்லிக்கு சட்னியாகவும் சாப்பிடலாம்.
இந்த துவையல் கார சாரமாக கஞ்சி, புளி சாதம், தயிர் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.
கடலை பருப்பு உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல், உடல் எடையை குறைக்க, தலைமுடி உதிர்வை தடுக்க என பல நன்மைகளை கொடுக்கும். இதனால் வாரம் ஒருமுறையேனும் ஒரு வேளை உணவில் இந்த கடலை பருப்பு துவையலை சேர்த்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்