உங்கள் தொப்பையை துரத்தி ஓடச்செய்யும் ஆரஞ்சு பழங்கள்! தினமும் எப்படி சாப்பிடுவது நல்லது? இதோ வழிகாட்டி!
Oct 19, 2024, 06:00 AM IST
உங்கள் தொப்பையை துரத்தி ஓடச்செய்யும் ஆரஞ்சு பழங்களை தினமும் எப்படி சாப்பிடுவது நல்லது. இதோ இங்கு அதற்காக வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழங்கள் உடல் எடையை குறைக்கக்கூடிய ஆரோக்கிய தேர்வுகளுள் ஒன்று. இவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கலோரிகள் குறைவானவை இந்த ஆரஞ்சு பழங்கள். இவை உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கின்றன. உங்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்பவையாகும். ஆரஞ்சு பழங்கள் லோகிளைசமிக் இண்டக்ஸ் உணவுப்பட்டியலில் உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. கொழுப்பை மாற்றுகிறது. இதை முழுமையாக, பழச்சாறாக அல்லது சாலட்கள் மற்றும் ஸ்முத்திகளில் கலந்து சாப்பிடலாம். இவற்றை அளவாகத்தான் உட்கொள்ள வேண்டும். அதிகம் சாப்பிடக்கூடாது.
சாறு நிறைந்த புளிப்பு சுவை கொண்டவை ஆரஞ்சு பழங்கள். இவை பலரின் விருப்பமான பழமாகும். குளிர் மாதங்களில் இந்தியாவில் ஆரஞ்சு பழங்கள் நல்ல விளைச்சலை எட்டும் என்பதால் ஆரோக்கியம் நிறைந்த இந்த பழங்களில் வரத்து சீசனில் அதிகமாகவே இருக்கும்.
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது என்று ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிகம் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றன. உடல் எடை குறைப்பதில் ஆரஞ்சு பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரஞ்சு பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான விடை அதன் ஊட்டச்சத்து அளவுகளிலே உள்ளது. உடல் எடையை குறைப்பில் ஆரஞ்சு பழங்களின் பங்கு என்ன என்பதையும் நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
இந்த புளிப்புச்சுவை நிறைந்த பழங்களில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள், மக்கள் கூடுதலாக சில கிலோக்களை குறைக்க உதவுகிறது. தினமும் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. உடல் வளர்சிதையை அதிகரித்து, உடலின் நீர்ச்சத்தை அதிகமாக்குகிறது.
இதன் ஊட்டச்சத்து அளவுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள், ஒரு மிதமான அளவுள்ள ஆரஞ்சு பழத்தில் 60 முதல் 80 கலோரிகள் உள்ளது என்று கூறுகிறது. இதனால் கலோரிகள் குறைவான ஒரு சிறந்த ஸ்னாக்ஸாக இந்த ஆரஞ்சு பழங்கள் உள்ளன. ஆரஞ்சு பழங்களில் உள்ள உயர்தர நார்ச்சத்துக்கள் பசி உணர்வைக் குறைக்கின்றன. நீண்ட நேரம் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் தேவையின்றி அதிகம் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
நீர்ச்சத்து
உடலை நீர்ச்சத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியம் ஆகும். அதுதான் ஆரோக்கிமான உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவுகளுக்கு தேவையான ஒன்று. ஆரஞ்சில் உள்ள அதிகப்படியான தண்ணீர் உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. இதனால் உங்களின் ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவுகள் குறைகிறது.
சர்க்கரை குறைவு
ஆரஞ்சு பழங்கள் கிளைசமிக் குறைவான உணவுகளின் பட்டியலில் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சாப்பிட வேண்டும் என்ற ஆவலைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் உங்களால் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க முடிகிறது. ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், கொழுப்பு வளர்சிதையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கொழுப்பை ஆற்றலாக மாற்றுகிறது.
உடல் எடையைக் குறைக்க ஆரஞ்சு பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்?
உடல் எடையைக் குறைப்பதற்கு ஆரஞ்சு பழங்களை பல்வேறு வகைகளில் உட்கொள்ள முடியும். அவற்றை அப்படியே முழு பழமாக சாப்பிடலாம். பிழிந்து பழச்சாறாக பருகலாம். சாலட்கள் அல்லது ஸ்மூத்திகளில் கலந்து பருகலாம். தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராகப் பருகலாம். ஆனால் எந்த நிலையில் எடுத்தாலும் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
அதிகப்படியாக ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடுவது செரிமானக் கோளாறுகளுக்கு உதவுகிறது. ஆசிட் வெளியேற்றம், பற்களின் எனாமல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இவற்றை அதிகம் உட்கொள்வது உங்கள் உடலில் எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
சில மருந்துகள் உட்கொள்ளும்போது, அதிகளவு ஆரஞ்சுப்பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மருந்துகளுடன் வினைபுரிய வாய்ப்பு உள்ளது. எனவே அளவாக உட்கொள்ளவேண்டும். ஆரஞ்சு பழங்கள் உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுப்பவைதான் என்றாலும், அதை சாப்பிடும்போது எச்சரிக்கை தேவை. குறிப்பாக உடல் நலக்கோளாறுகள் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையும் ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.