Morning Quotes : இந்த 10 இந்திய உணவுகளின் ஆங்கிலப்பெயர்கள் தெரியுமா? சுவாரஸ்யமாக உள்ள அவற்றை பாருங்களேன்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : இந்த 10 இந்திய உணவுகளின் ஆங்கிலப்பெயர்கள் தெரியுமா? சுவாரஸ்யமாக உள்ள அவற்றை பாருங்களேன்!

Morning Quotes : இந்த 10 இந்திய உணவுகளின் ஆங்கிலப்பெயர்கள் தெரியுமா? சுவாரஸ்யமாக உள்ள அவற்றை பாருங்களேன்!

Priyadarshini R HT Tamil
Aug 27, 2024 05:12 AM IST

Morning Quotes : இந்த 10 இந்திய உணவுகளின் ஆங்கிலப்பெயர்கள் தெரியுமா? சுவாரஸ்யமாக உள்ள அவற்றை பாருங்களேன், உங்களின் ஆங்கில அறிவும் பெருகும்.

Morning Quotes : இந்த 10 இந்திய உணவுகளின் ஆங்கிலப்பெயர்கள் தெரியுமா? சுவாரஸ்யமாக உள்ள அவற்றை பாருங்களேன்!
Morning Quotes : இந்த 10 இந்திய உணவுகளின் ஆங்கிலப்பெயர்கள் தெரியுமா? சுவாரஸ்யமாக உள்ள அவற்றை பாருங்களேன்!

பக்கோடா

பக்கோடா, மொறுமொறுப்பாகவும், சுவையும் நிறைந்த ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி ஆகும். மாலையில் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் விரும்பி உண்ணக்கூடிய ஸ்னாக்ஸாக பக்கோடா உள்ளது. மழை, பக்கோடா, இளையராஜா பாடல்கள் என நம் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்த ஒரு விஷயமாக பக்கோடா உள்ளது. ஆங்கிலத்தில் பக்கோடாவுக்கு ‘ஃப்ரைட்டர்ஸ்’ என்று பெயர். ஆங்கில பக்கோடாவும் மொறுமொறுப்பானதுதான். அதில் காரம் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆங்கில உணவு வகைகளிலும் பக்கோடாவை ஒத்த உணவுகள் உள்ளன.

ஐலேபி

வட இந்தியாவின் முக்கியமான இனிப்புகளுள் ஐலேபியும் ஒன்று. வட்ட வடிவில் நமது மனதை நிறைக்கும் ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். இது ஆங்கிலத்தில் ‘ஃபன்னல் கேக்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இது சர்க்கரை பாகில் ஊறவைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. ஆனால் வெளி நாடுகளில், இது கேரமல், சாக்லேட் சாஸ், ஸ்ட்ராபெரிசுடன் பரிமாறப்படுகிறது.

ரொட்டி

ரொட்டி என்றால் ஆங்கிலத்தில் சப்பாத்தில் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இல்லை என்பதுதான் உண்மை. மேற்கத்திய நாடுகளில் ரொட்டி மற்றும் நாண் இரண்டும் ‘ஃப்ளாட் பிரட்’ என்று அழைக்கப்படுகிறது.

சமோசா

சமோசா என்பது அனைவருக்கும் பிடித்த இந்திய ஸ்னாக்ஸ் ஆகும். இதற்கு ஆங்கிலத்தில் 2 வித்யாசமான பெயர்கள் உள்ளன. இதை சிலர் ‘சேவரி பேஸ்ட்ரி’ என்றும், சிலர் ‘ரிசோலே’ என்றும் அழைக்கிறார்கள்.

பானிபூரி

பானிபூரி அல்லது கோல் கப்பா என்ற அனைவருக்கும் பிடித்த சாட் உணவுக்கு இந்திய மனங்களில் சிறப்பான இடம் உள்ளது. குறிப்பாக வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தது. இதை ஆங்கிலத்தில் ’ஸ்பைஸ் வாட்டல் பால்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.

தோசை

தோசை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த இந்திய உணவாகும். இதை சட்னி, சாம்பாருடன் சாப்பிட சுவை அள்ளும். இதற்கு ஆங்கிலத்தில் பெயர் உள்ளது. ‘ரைஸ் பேன்கேக்’ அல்லது ‘ரைஸ் கிரீப்ஸ்’ என்பது தோசையின் ஆங்கிலப்பெயராகும்.

பப்பட்

மொறுமொறுப்பான அப்பளம், முக்கியமான இந்திய உணவாகும். அதற்கு ஆங்கிலத்தில் பெயர் உள்ளது. அவை ‘பப்படம்ஸ் அல்து லென்டில் வேஃபர்ஸ்‘ என்று அழைக்கப்படுகிறது.

கீர் அல்லது பாயாசம்

பாயாசம் எளிதில் செய்யக்கூடிய ஒரு இந்திய இனிப்பு வகை. விருந்து என்றாலே அதில் முக்கிய இடம் வகிக்கும். இது ‘ரைஸ் புட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது. இது குளுகுளுவென பரிமாறப்படுகிறது.

ரைத்தா

ரைத்தா என்பது ஒரு சைட் டிஷ் எனப்படும் துணை உணவு, தொட்டுக்கொள்ள பரிமாறப்படுகிறது. இது வெங்காயம், தக்காளி, வெள்ளரி, கேரட், பீட்ரூட் என தயிருடன் கலந்து பரிமாறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்குப் பெயர் ‘யோகர்ட் சாலட்’ என்பதாகும்.

வடை

வடை என்பது அனைவருக்கும் பிடித்த மொறுமொறு ஸ்னாக்ஸ் ஆகும். இது விருந்துகளில் பரிமாறப்படும் உணவாகும். இதை ஸ்னாக்சாக சாம்பார், சட்னியுடனும், தனியாக தொட்டுக்கொள்ளவும், பாயாசத்துடனும் என பல வழிகளில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஆங்கிலத்தில் ‘ஸ்பைசி அல்லது சேவரி டோனட்’ என்று பொருள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.