போர் கொடுத்த பொறி.. உடலை பதம் பார்த்த தோட்டாக்கள்.. “அசோக சக்கரத்த வாங்கும் போது கூட ஒரு சொட்டு கண்ணீர்” -ராணுவ அதிகாரி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போர் கொடுத்த பொறி.. உடலை பதம் பார்த்த தோட்டாக்கள்.. “அசோக சக்கரத்த வாங்கும் போது கூட ஒரு சொட்டு கண்ணீர்” -ராணுவ அதிகாரி

போர் கொடுத்த பொறி.. உடலை பதம் பார்த்த தோட்டாக்கள்.. “அசோக சக்கரத்த வாங்கும் போது கூட ஒரு சொட்டு கண்ணீர்” -ராணுவ அதிகாரி

Kalyani Pandiyan S HT Tamil
Oct 05, 2024 07:38 AM IST

முகுந்த் மனைவி, போரில் இறந்த ராணுவ வீரரருக்கு வழங்கப்படும் அசோக சக்கரத்தை வாங்கும் போது கூட, ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. - ராணுவ அதிகாரி!

போர் கொடுத்த பொறி.. உடலை பதம் பார்த்த தோட்டாக்கள்.. “அசோக சக்கரத்த வாங்கும் போது கூட ஒரு சொட்டு கண்ணீர்” -ராணுவ அதிகாரி
போர் கொடுத்த பொறி.. உடலை பதம் பார்த்த தோட்டாக்கள்.. “அசோக சக்கரத்த வாங்கும் போது கூட ஒரு சொட்டு கண்ணீர்” -ராணுவ அதிகாரி

கடந்த 2014 ம் ஆண்டு தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் நடந்த போரில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், முகுந்த் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்தார்.

 

மனைவியுடன் முகுந்த்
மனைவியுடன் முகுந்த்

நெஞ்சில் பாய்ந்த 3 குண்டுகள்

அதில் அவர் பேசும் போது, “ முகுந்த் மனைவி, போரில் இறந்த ராணுவ வீரரருக்கு வழங்கப்படும் அசோக சக்கரத்தை வாங்கும் போது கூட, ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. அவர் அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தார். முகுந்த் உடனேயே அவர் வாழ்ந்ததால் அவரிடம் இருந்து இந்த வலிமை வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

போரில் சக ராணுவ வீரரான விக்ரம் சிங்கை எதிரிகள் சுட்டார்கள். அவரை காப்பாற்ற முயன்ற முகுந்த், விக்ரமை குறி வைத்து எதிரிகள் சுட்ட 3 தோட்டாக்களை தன் உடலில் வாங்கினார். தோட்டக்கள் பாய்ந்ததில் அவரது உடலில் இருந்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது. ஆனால், போரில் இருந்த கவனமும், விக்ரம் உயிரிழந்து விட்டாரே என்ற சோகமும், அவரது கவனத்தை திசைத்திருப்பில் விட்டது. போர் முடிந்து யூனிட்டிற்கு வந்த முகுந்த் திடீரென மயக்கம் போட்டு கீழே விழ, அவரை சோதித்து பார்த்த போது, அவரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து இருந்தது தெரிய வந்தது.” என்று பேசினார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதற்கான காரணம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி பேசும் போது, “முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. நேற்று இந்தப்படத்தில் இருந்து மின்னலே பாடல் வெளியானது.

 

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.