சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்தோடச்செய்யும்! எத்தனை பானங்கள் அதற்கு உதவுகிறது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்தோடச்செய்யும்! எத்தனை பானங்கள் அதற்கு உதவுகிறது பாருங்கள்!

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்தோடச்செய்யும்! எத்தனை பானங்கள் அதற்கு உதவுகிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 11, 2024 02:58 PM IST

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்தோடச்செய்யும். எத்தனை பானங்கள் அதற்கு உதவுகிறது என்று தெரிந்துகொண்டு இவற்றை வீட்டிலே முயற்சி செய்து பலன்பெறுங்கள்.

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்தோடச்செய்யும்! எத்தனை பானங்கள் அதற்கு உதவுகிறது பாருங்கள்!
சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்தோடச்செய்யும்! எத்தனை பானங்கள் அதற்கு உதவுகிறது பாருங்கள்!

அறிகுறிகள்

சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் அவற்றை போக்கும் இயற்கை வழிகள்

வயிறு முதல் சிறுநீர் பாதையில் கடும் வலி

விட்டுவிட்டு வலி ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.

சிறுநீர் சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் கழித்தல்

கடும் துர்நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்

வழக்கத்தை விட அதிகம் சிறுநீர் கழிப்பது அல்லது குறைவாக கழிப்புது

வாந்தி மற்றும் மயக்கம்

காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்படும்போது உடலில் அதிக குளிர் மற்றும் நடுக்கம் ஏற்படுவது,

இந்த அறிகுறிகள் அதிகம் ஏற்படும்போதும் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறும்போதும் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

சிறுநீரகத்தில் உள்ள கற்களைப்போக்க வேண்டுமெனில் இந்த எளிய பானங்களை நீங்கள் வீட்டிலே செய்து சாப்பிட முடியும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

மருத்துவரிடம் செல்வதும் அவசியம்தான், அதேவேளையில் நீங்கள் வீட்டிலே சில பானங்களை பருகுவதன் மூலம் உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை போக்க முடியும். இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உமவும். இங்கு சிறுநீரக கற்களைப் போக்கும் எண்ணற்ற பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை தண்ணீர்

தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 1

தண்ணீர் – 4 டம்ளர்

தேன் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் எலுமிச்சையை பிழிந்துவிடவேண்டும். இனிப்புக்கு தேவைப்பட்டால் தேன் பிழிந்துவிடவேண்டும். இதை நீங்கள் நாள் முழுவதும் நீங்கள் பருகவேண்டும். இது உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் பானம்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் சைடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – ஒரு கப்

தேன் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கப் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகளை கலந்து, தேனையும் தேவைப்பட்டால் கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை பருகினால், இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

துளசி டீ

துளசி இலைகள் – 15

தண்ணீர் – 2 கப்

தேன் – தேவையான அளவு

செய்முறை

தண்ணீரை சூடாக்கி அதில் துளசி இலைகளை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அடுப்பை அணைத்து அரை மணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும். வடித்து தேன் கலந்து பருகவேண்டும். இந்த பானத்தை தினமும் பருகி வந்தால், உங்கள் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

மாதுளை சாறு

தேவையான பொருட்கள்

மாதுளை பழம் – 1

செய்முறை

மாதுளையை உதிர்த்து மிக்ஸியில் சேர்த்து சாறு பிழிந்து வடிகட்டி பருகவேண்டும். இந்த சாறை தினமும் பருகவேண்டும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

தர்ப்பூசணி ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்

தர்ப்பூசணி – சிறிதளவு

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் – ஒரு கப்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் தர்ப்பூசணி துண்டுகளையும், தேங்காய் தண்ணீர் அல்லது இளநீரை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவேண்டும். இதை அப்படியே பருகவேண்டும். இந்த பானம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் மற்றும் சிறுநீரகத்தின் இயக்கத்தையும் அதிகரிக்கும்.

குறிப்புகள்

உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளும்போது, அது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனவே நாள் முழுவதும் அதிக தண்ணீர் பருகுவது அல்லது பழச்சாறுகள், மோர் குடிப்பதை வழக்கமாகக்கொள்ளவேண்டும்.

உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். கீரை, பீட்ரூட் போன்ற ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றாமல் பாதுகாக்கும்.

மேலும் உங்களின் உடல் நிலை குறித்து எப்போதும் மருத்துவரிடம் இருந்து அறிவுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.