தித்திக்கும் தேன்! எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான இனிப்பான ரகசியம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தித்திக்கும் தேன்! எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான இனிப்பான ரகசியம்!

தித்திக்கும் தேன்! எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான இனிப்பான ரகசியம்!

Suguna Devi P HT Tamil
Oct 23, 2024 11:18 AM IST

தேன் இயற்கையான சர்க்கரை ஆற்றலை அளிக்கின்றன. மேலும் பசியை நிர்வகிக்க உதவுகின்றன, எடை இழப்புக்கு உதவுகின்றன

தித்திக்கும் தேன்! எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான இனிப்பான ரகசியம்!
தித்திக்கும் தேன்! எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான இனிப்பான ரகசியம்!

"ஆரோக்கியத்தின் தங்க அமுதம்" என்று அழைக்கப்படும் தேன், ஆயுர்வேதம், அறிவியல் மற்றும் இயற்கை மருத்துவத்தில் அதன் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேன் ஒரு பிரபலமான இயற்கையான இனிப்பு உணவு ஆகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் வழங்குகிறது.தேனின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் எடை இழப்புக்கான சாத்தியமான நன்மைகளைப் பார்ப்போம்.

தேனின் ஊட்டச்சத்து 

ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிகள், 0 கிராம் கொழுப்பு, 0 மில்லிகிராம் சோடியம், 17 கிராம் கார்போஹைட்ரேட், 17 கிராம் சர்க்கரை மற்றும் 0.1 கிராம் புரதம் உள்ளது. இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்களின் அதிக செறிவைக் கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தேன் வழக்கமான சர்க்கரையை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, எனவே இரத்த சர்க்கரை அளவு மெதுவாக உயர்கிறது, இது பசியை குறைக்க உதவுகிறது.

தேனின் ஆரோக்கிய நன்மைகள்

தேன், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அனைத்தும் இயற்கையான சர்க்கரைகள் ஆகும். அவை ஆற்றல் ஊக்கத்தை அளிக்கின்றன. நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு தேக்கரண்டி தேனை உட்கொண்டால், தூக்கத்தில் உங்கள் உடலின அதிக கொழுப்பை எரிக்க உடகவுகிறது. 

கல்லீரல் செயல்பாடு

கல்லீரலை குளுக்கோஸ் உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதன் மூலமும், மூளையில் கொழுப்பை எரிக்கும் இரசாயனங்களை உருவாக்குவதைத் தூண்டுவதன் மூலமும் தேன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்பற்றுவது இனிப்பு பசியை தூண்டும் மூளை சமிக்ஞைகளை சமப்படுத்த உதவும்.

உணவில் தேன் சேர்க்கும் வழிகள்

இலவங்கப்பட்டை மற்றும் தேன்: ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டம்ளர் இலவங்கப்பட்டையை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், பசியைக் குறைக்கவும் பயன்படுகிறது. 

தேன் &எலுமிச்சை நீர்: செரிமானத்திற்கு உதவ, சூடான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும்.

தேன்& ஓட்ஸ்: வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் கொட்டைகளை சமைத்த ஓட்ஸ் மற்றும் தேனுடன் கலந்து சாப்பிடலாம். இது சிறந்த காலை உணவு ஆகும். 

தேன்& இஞ்சி கிரீன் டீ: காலையில் உற்சாகம் அடைவதற்கு இஞ்சி கிரீன் டீயில்  தேன்  கலந்து குடித்து வர வேண்டும். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.