தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நாவில் உமிழ்நீரை தூண்டும் ஸ்நாக்ஸ்.. பன்னீர் டிக்கா முதல் தந்தூரி விங்ஸ் வரை.. வீட்டிலேயே தயார் செய்வது எப்படி

நாவில் உமிழ்நீரை தூண்டும் ஸ்நாக்ஸ்.. பன்னீர் டிக்கா முதல் தந்தூரி விங்ஸ் வரை.. வீட்டிலேயே தயார் செய்வது எப்படி

Marimuthu M HT Tamil

Dec 04, 2024, 03:43 PM IST

google News
நாவில் உமிழ்நீரை தூண்டும் ஸ்நாக்ஸ்.. பன்னீர் டிக்கா முதல் தந்தூரி விங்ஸ் வரை.. வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.
நாவில் உமிழ்நீரை தூண்டும் ஸ்நாக்ஸ்.. பன்னீர் டிக்கா முதல் தந்தூரி விங்ஸ் வரை.. வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

நாவில் உமிழ்நீரை தூண்டும் ஸ்நாக்ஸ்.. பன்னீர் டிக்கா முதல் தந்தூரி விங்ஸ் வரை.. வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

சுவையான ஸ்நாக்ஸ்களை வெளியில் சாப்பிடுவதை விட, நம் வீட்டில் தரமான எண்ணெயில் தயார் செய்து சாப்பிட்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்காது. ஆபத்தை விளைவிக்காது. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான சமையல் ரெசிபிகளை, நீங்கள் முயற்சி செய்யலாம்.

இந்திய பாணியில் ஆறு வகையான குறைந்த கலோரி சிற்றுண்டிகளை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இவற்றை தயார் செய்து உண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்படும். வயிற்றுக்குப் பாதிப்பு வராது. இது எடையைப் பராமரிக்க உதவும்.

எனவே வாருங்கள் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிகளை பார்க்கலாம்.

1. இனிப்பு உருளைக்கிழங்கு பொரியல்:

இந்த எளிதான உணவை தயாரிக்க, இனிப்பு உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, பின்னர் அவற்றின் தோலை உரிக்கவும். பின்னர் அவற்றை மெல்லிய நீளமான துண்டுகளாக, குச்சிபோல் வெட்டவும். நறுக்கிய உருளைக்கிழங்குடன் 1 டீஸ்பூன் எண்ணெய், எலுமிச்சை சாறு, சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலக்கவும். இவற்றை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். இதை வறுக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அது கொழுப்பு இல்லாதது என்பதால், அந்த எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவது நல்லது.

2. காரமான வறுத்த கொண்டைக்கடலை:

ஊறவைத்து வேகவைத்த கொண்டைக்கடலையை எடுத்துக்கொண்டு வாணலியில் இட்டு நன்கு வதக்கவும். அதன்மீது சீரகம், மிளகாய்த் தூள் மற்றும் பூண்டு தூள் போதுமான அளவு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் சிறிது எண்ணெய்விட்டு வறுக்கவும். நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த, இந்த வறுத்த கொண்டைக்கடலை தயார். இதனை மாலை தேநீருடன் சேர்த்து சுவைக்கலாம்.

3. காய்கறிகளுடன் கூடிய வெள்ளரி ரைத்தா:

தயிரில் உங்களிடம் இருக்கும் காய்கறி துருவல்களைப் போட்டுக்கொள்ளவும். மேலும் சிறிதளவு நறுக்கிய வெள்ளரியைப் போட்டுக்கொள்ளவும். அப்படி செய்வதால், புத்துணர்ச்சியூட்டும் வெள்ளரி ரைத்தா நமக்கு கிடைத்துவிடும். கொழுப்பு நிறைந்த மயானீஸுக்கு மாற்றாக தயிர் அடிப்படையிலான ரைத்தாவை முயற்சி செய்து உண்ணுங்கள்.

4. பன்னீர் டிக்கா:

இந்த சுவையான பன்னீர் டிக்கா செய்ய, சிறிது தயிர், இஞ்சி-பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் உருவாக்கி, அதில் பன்னீரை துண்டுகளாக வெட்டி அதில் மூழ்கி எடுத்துக்கொள்ளவும். அதனைத் தொடர்ந்து, ஒரு நான்-ஸ்டிக் கடாயில், சிறிது எண்ணெயைத் தேய்த்து, ரெடிசெய்த பன்னீர் துண்டுகளை தங்க பழுப்பு வரும் வரை சமைக்கவும். இதை புதினா சட்னியுடன் சுவைக்கலாம்.

5. சன்னா மசாலா:

முதலில் கொண்டைக்கடலையை வேகவைத்து இறக்கவும். அதனைத்தொடர்ந்து ஒரு வாணலியில், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். அதன்மேல், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, லேசாக மிளகாய்த்தூள், லேசாக உப்பு தூவி, அதன்மேலே எலுமிச்சை சாறினை பிழிந்துவிடவும். சுவையான சன்னா மசாலா தயார்.

6. தந்தூரி சிக்கன் விங்ஸ்:

முதலில் கோழியின் துண்டுகளை உங்களுக்கு வேண்டிய பதத்தில் வெட்டி, மஞ்சள் மற்றும் உப்பு போட்டு சுத்தப்படுத்திக்கொள்ளவும். அதனனைத்தொடர்ந்து தந்தூரி மசாலா, தயிர், மிளகாய்த்தூள், உப்பு, மிளகு ஆகியவற்றைக் கலக்கவும். இந்த பேஸ்ட்டில் கோழியின் துண்டுகளை மூழ்கச் செய்து எடுக்கவும். பிறகு, அதனை கடாயிலோ, ரோலிலோ போட்டு மிருதுவாக வறுத்து எடுங்கள். அதனுடன் புதினா சட்னியை வைத்து சாப்பிடவும்.

எடை இழப்பு என்று வரும்போது பெரும்பாலான மக்கள் இந்த வகை உணவுகளை சாப்பிட தயங்குகிறார்கள். இருப்பினும், இந்த சுவையான உணவுகள் வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால், எந்த தயக்கமும் இல்லாமல் சுவைக்கலாம். அப்படியானால், ஏன் காத்திருக்க வேண்டும். இப்பொழுதே முயற்சி பாருங்களேன்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி