இப்படி ஒரு டேஸ்ட்டான்னு அசந்துடுவீங்க.. வெள்ளரிக்காய் பருப்பு கூட்டு இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க!
வெள்ளரிக்காயில் தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு வைத்து சாப்பிடும் வகையில் ருசியான வெள்ளரிக்காய் பருப்பு கூட்டு செய்து பாருங்கள். அதன் ருசி அபாரமாக இருக்கும் . இந்த பாசிப்பருப்பு சேர்த்து செய்யும் இந்த வெள்ளரிக்காய் கூட்டை குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்
பொதுவாக நாம் வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடுவோம். உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவோம். அல்லது ஜூஸ் செய்து குடிப்போம். ஆனால் வெள்ளரிக்காயில் தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு வைத்து சாப்பிடும் வகையில் ருசியான வெள்ளரிக்காய் பருப்பு கூட்டு செய்து பாருங்கள். அதன் ருசி அபாரமாக இருக்கும் . இந்த பாசிப்பருப்பு சேர்த்து செய்யும் இந்த வெள்ளரிக்காய் கூட்டை குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம் ஆரோக்கியம் நிறைந்தது.
வெள்ளரிக்காய் கூட்டு செய்முறை
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் -அரைக்கிலோ
பெரிய வெங்காயம்-1
தக்காளி- 1
பாசிப்பருப்பு - 1 கப்
பூண்டு -4 பல்
சீரகம் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடலெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லி இலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்
வெள்ளரிக்காயை தோல் சீவி கொஞ்சம் பெரிய சைஸில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் பாசிப்பருப்பு வெள்ளரிக்காய் இரண்டையும் சேர்க்க வேண்டும்
அதில் ஒரு தக்காளி ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் சீரகம், 2 பச்சை மிளகாய் மற்றும் 4 பல் பூண்டையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு கரண்டி எண்ணெய் சேர்த்து இப்போது குக்கரை மூடி 2 அல்லது 3 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சீரகம், வத்தல் போட்டு தாளிக்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் சின்ன வெங்காயம் சிவந்து வரும் போது அதில் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். இந்த தாளிப்பை ஏற்கனவே குக்கரில் வேக வைத்து எடுத்த பாசிப்பருப்பு வெள்ளரிக்காய் கூட்டில் கலந்து லேசாக கொதிக்க வைத்து இறக்கினால் ருசியான வெள்ளரிகாய் பருப்பு கூட்டு ரெடி. இது சூடான சாதம், சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பு :
இந்த வெள்ளரிக்காய் பருப்பு கூட்டின் சுவையை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால் அதில் கடைசியாக சிறிதளவு தேங்காய் துருவல் சேர்க்கலாம். தாளிக்கும் போது கொஞ்சம் நெய் சேர்த்தால் ருசி அட்டகாசமாக இருக்கும்.
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆரோக்கியமான தோல்
வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சருமம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இரத்த அழுத்தம்
பெரும்பாலும், அதிகப்படியான சோடியம் மற்றும் உடலில் பொட்டாசியம் குறைபாடு காரணமாக, ஒரு நபர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார். வெள்ளரிக்காயில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
சர்க்கரை நோய்
இதில் உள்ள சர்க்கரை பீட்டாசின் உடலில் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இது தவிர, குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ஆகியவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
வெள்ளரிக்காயில் உள்ள ஃபிளாவனாய்டுகள், லிக்னான்கள் மற்றும் ட்ரைடர்பீன்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் உடலில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து செல்களைப் பாதுகாக்கின்றன.
உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்
வெள்ளரிக்காயில் உள்ள 95 சதவீத நீர், உடலை நீரேற்றம் செய்வதன் மூலம் உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கல்
வெள்ளரிக்காயில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள இந்த நார்ச்சத்து குடல் இயக்கத்தை கட்டுப்படுத்தி மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
எடை இழப்பு
நீங்கள் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருந்தால், வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் தண்ணீரை குடித்து உடல் எடையை குறைக்கலாம். வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்