Morning Quotes : மாங்கு மாங்கென்ற உடற்பயிற்சி வேண்டாம்! மளமளவென உடல் எடை குறைக்கும் மாயம் செய்யும் பானம்!
Sep 18, 2024, 05:59 AM IST
Morning Quotes : மாங்கு மாங்கென்ற உடற்பயிற்சி வேண்டாம். மளமளவென உடல் எடை குறைக்கும் மாயம் செய்யும் பானம். மேலும் அதில் உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உடல் பருமன்
உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.
இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.
சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.
ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் – 1
(வயிற்றில் சேர்ந்துள்ள அனைத்து கொழுப்பையும் அகற்றக்கூடியது. உடல் கொழுப்பைக் கரைக்கும் திறனை அதிகரிக்கும். பசியைக் கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை விரைவில் குறையும்)
கிராம்பு – டேபிள் ஸ்பூன்
(வயிற்றில் உள்ள கொழுப்பை கரைந்து ஓடச்செய்யும்)
பிரியாணி இலைகள் – 4
(கொழுப்பை கரைத்து அது சேர்வதை தடுக்கும்)
செய்முறை
எலுமிச்சையை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கிராம்பு, பிரியாணி இலை மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். 10 நிமிடம் கொதித்தவுடன் அந்த தண்ணீரின் நிறம் பிரவுனாக மாறும். அடுப்பை அணைத்து அப்படியே அரை மணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும்.
பருகும் முறை
பின்னர் வடிகட்டி ஒரு 150 மில்லி லிட்டர் அளவு பருகவேண்டும். எஞ்சிய பானத்தை ஃபிரிட்ஜில் வைத்து பருகலாம். இந்த அளவை மூன்று நாட்கள் பயன்படுத்தலாம். இதை 7 நாட்கள் தயாரித்து சேமித்துக்கொள்ளலாம். இதை இளஞ்சூட்டில் காலை உணவுக்கு முன்னர் பருகவேண்டும். தேவைப்பட்டால் தேன் சேர்த்துக்கொள்ளலாம். தேன் இல்லாமலும் பருகலாம்.
பயன்கள்
இந்த பானம் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். வைரஸ்களை எதிர்த்து போராடும். நோய்கள் மற்றும் சளியைக் கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உடல் எடையை குறைக்கச் செய்யும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்