Mint To Coriander:புதினா முதல் கொத்தமல்லி வரை: உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் உணவுப்பொருட்கள்
Apr 07, 2024, 04:13 PM IST
Mint To Coriander: வெப்ப அலைகளை சமாளிக்கவும், உங்கள் உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெப்பத்தை வெல்ல உதவும் இந்த புத்துணர்ச்சியூட்டும் மூலிகைகள் பற்றிப் பார்ப்போம்.
Mint To Coriander: கோடைகாலம் வந்து, தீவிர வெப்ப அலை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. குளிர்பானங்கள் இல்லாத விருந்துகளே இல்லை எனலாம்.
வெப்ப அலையைச் சமாளிக்கவும், உங்கள் உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெப்பத்தை வெல்ல உதவும் குளிரூட்டும் உணவுகளை எடுத்துக்கொள்வதே அவசியம்.
நண்பகல் நேரத்தில் வெப்பத்தினால் உண்டாகும் பிரச்னைகளை சரிசெய்ய பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
உடலில் அடிக்கடி வெப்பநிலை காரணமாக,வியர்வை வெளியேறுகிறது. வெப்பநிலையைச் சமாளிக்க உடலை ஆதரிக்க புதினா, பெருஞ்சீரகம், கொத்தமல்லி, செம்பருத்தி போன்றவற்றை நம் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி, வறுவல் சார்ந்த உணவுகள், உப்பு மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. இதனால், பித்தம் அதிகமாகும்.
சிலருக்கு வெயில் காலத்தில் மசாலாப் பொருட்கள் ஒத்துவராது. இஞ்சி மற்றும் மிளகாய் சார்ந்த உணவுகள், உடலில் வெப்பநிலையை அதிகரிக்க உதவும். குடல் ஆரோக்கியப் பிரச்னைகளைத் தடுக்க, கோடையில் அவற்றின் உட்கொள்ளலை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக்க புதினா, சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் போன்ற மசாலாப் பொருட்களை கோடைகால உணவில் சேர்க்க வேண்டும்.
"கோடைகால மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, இயற்கையாகவே உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீரேற்றத்துடன் இருக்க சில மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது வெப்பத்திலிருந்து கூடுதல் நிவாரணம் அளிக்கும் "என்று மும்பையின் வோக்ஹார்ட் மருத்துவமனைகளின் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ரிதுஜா உகல்முகலே கூறுகிறார்.
கோடைகாலத்திற்கான சிறந்த உணவுகள்:
டாக்டர் ரிதுஜா பரிந்துரைத்த குளிரூட்டும் பண்புகளுக்கு
1. மிளகுக்கீரை: இது அதன் புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் குளிரூட்டும் விளைவுக்கு புகழ்பெற்றது. மிளகுக்கீரை வியர்வையை ஊக்குவிப்பதன் மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உடலில் நீரேற்றத்துக்கு உதவுகிறது.
2.புதினா: மிளகுக்கீரை போலவே, புதினா கீரை, உடலுக்கு குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வெப்பம் தொடர்பான அசௌகரியத்தைத் தணிக்க உதவும். புதினாவில் இருக்கும் உள்ளடக்கம் புத்துணர்ச்சியூட்டும் சுவையை அளிப்பது மட்டுமல்லாமல், வியர்வை சுரப்பிகளையும் தூண்டுகிறது. இது வெப்பச் சிதறலை எளிதாக்குகிறது. சாலட்கள் தயாரிக்க, புதினா வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.
3. எலுமிச்சை தைலம்: எலுமிச்சைப் பழத்தில் இருந்து எலுமிச்சை தைலம் தயார் ஆகிறது. இது உடலில் வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. எலுமிச்சை தைலம் பதற்றத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகிறது. இது வெப்பமான காலநிலையில் உடலுக்கு உதவும்.
4. செம்பருத்தி: செம்பருத்தி துடிப்பான பூக்களுக்கு பெயர் பெற்றது. அது உடலுக்கும் குளிர்ச்சியைத் தருகிறது. செம்பருத்தி தேநீர் உட்கொள்வது உடல் வெப்பநிலையை சீராக்கவும், உடலில் நீரேற்றத்தை மேம்படுத்தவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு சிறந்த கோடைகால பானமாக மாறும்.
5. சீரகம்: அவை பாரம்பரியமாக உடலை குளிர்விக்கவும் செரிமானத்திற்கு உதவவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்த, சீரகம், வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற வெப்பம் தொடர்பான உடலின் அசௌகரியத்தின் அறிகுறிகளைப் போக்க உதவக் கூடும்.
6. கொத்தமல்லி: கொத்தமல்லி பல உணவு வகைகளில் பிரதானமானது. இந்த மூலிகை உட்புற உடல் வெப்பத்தை குறைக்க உதவும் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. செரிமானம் மற்றும் வெப்பத்தினைக் குறைக்க கோடைகால உணவுக்கு மதிப்புமிக்க உணவாக இருக்கிறது.
டாபிக்ஸ்