Green Chilli Pickle : பச்சை மிளகாய், வெந்தய ஊறுகாய்! சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்ற வித்யாசமான சைட் டிஷ்!-green chilli pickle green chilli dill pickle a unique side dish that goes well with both rice and tiffin - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Chilli Pickle : பச்சை மிளகாய், வெந்தய ஊறுகாய்! சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்ற வித்யாசமான சைட் டிஷ்!

Green Chilli Pickle : பச்சை மிளகாய், வெந்தய ஊறுகாய்! சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்ற வித்யாசமான சைட் டிஷ்!

Priyadarshini R HT Tamil
Apr 06, 2024 07:00 AM IST

Green Chilli Pickle : நிபுணர்களைப்பொறுத்தவரை, வெந்தயத்தில் ஃப்யூரோடானோலிக் சாப்போனின்கள் அதிகம் உள்ளது. அது டெஸ்ட்ஸ்ரோன் அதிகரிக்கவும், ஸ்பெர்ம் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது.

Green Chilli Pickle : பச்சை மிளகாய், வெந்தய ஊறுகாய்! சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்ற வித்யாசமான சைட் டிஷ்!
Green Chilli Pickle : பச்சை மிளகாய், வெந்தய ஊறுகாய்! சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்ற வித்யாசமான சைட் டிஷ்!

வெந்தயம் – 2 டீஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் – சிறிய துண்டு

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பச்சை மிளகாயை நன்றாக கழுவிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு வெள்ளை துணியால் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவேண்டும். பின் நடுவில் கீறிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் வெந்தயத்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். பின் ஒரு தட்டில் அதை மாற்றவேண்டும். அதே கடாயில் ஒரு துளி எண்ணெய்விட்டு, கட்டிப்பெருங்காயத்தைபோட்டு பொரிந்ததும், அடுப்பை அணைத்து விடவேண்டும்.

பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வறுத்த வெந்தயம், வறுத்த பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும்.

இப்போது ஒரு சிறிய ஸ்பூன் வைத்து சிறிதளவு பொடித்த பொடியை ஒவ்வொரு பச்சை மிளகாயின் நடுவில் வைத்து 2 பக்களிலும் தடவவேண்டும்.

ஒரு இரும்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கலந்து வைத்துள்ள பச்சை மிளகாய்களை சேர்த்து சிறு தீயில் வைத்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவேண்டும். பின் பீங்கான் பவுலில் மாற்றிக் கொள்ளவேண்டும்.

இட்லி, தோசைக்கு பரிமாறும்போது வெந்தய மிளகாயின் மேல் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்துகொள்ளவேண்டும். இதை தயிர் சாதம் உள்ளிட்ட சாதங்களுக்கும் தொட்டுக்கொள்ளலாம். பழைய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள உகந்தது.

வெந்தயத்தின் நன்மைகள்

வெந்தயத்தில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான பொருட்கள், வாயுவை குறைத்து, வயிறு உப்புசத்தை தடுத்து ஜீரணத்துக்கு உதவுகிறது.

கொழுப்பை குறைக்கிறது. வெந்தயத்தில் ஸ்டிராய்டல் சப்போனின்கள் அதிகம் உள்ளது. அவை, வயிற்றில் கொழுப்பை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தி, மொத்த கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. அது ரத்தத்தில் ட்ரைகிளிசிரைட் அளவை குறைக்கிறது.

வெந்தயத்தில் அதிகம் காலாக்டோமன்னான் உள்ளது. அது அஜிரணக்கோளாறை குறைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வேறு எந்த வயிறு தொடர்பான பிரச்னைகளும் வராமல் இருக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ரத்தம் உறைதலை தடுக்க உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பது, உடற்சூட்டை அதிகரித்து, எடையை குறைத்து, பராமரிப்பதில் உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வுகளின்படி, வெந்தய தண்ணீரை குடிப்பது தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. தலையில் பொடுகு தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.

சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய தண்ணீரில் பாலிபிஃனாலிக் ஃபிளேவனாய்ட்கள் உள்ளது. அது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இருக்க உதவுகிறது.

வெந்தய தண்ணீரில் வைட்டமின் கே மற்றும் சி உள்ளது. அது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முகப்பரு, சுருக்கம், கரும்புள்ளிகள் மற்றும் கோடு ஆகியவைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நிபுணர்களைப்பொறுத்தவரை, வெந்தயத்தில் ஃப்யூரோடானோலிக் சாப்போனின்கள் அதிகம் உள்ளது. அது டெஸ்ட்ஸ்ரோன் அதிகரிக்கவும், ஸ்பெர்ம் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பதன் மூலம், மயக்கம், சோர்வு, காலை நேர சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அனைத்தையும் குறைக்க உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.