அர்த்தம் நிறைந்த, ஆன்மீக பெயர்கள்; உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது! இது பீகாரி பெயர்கள்!
Nov 26, 2024, 07:00 AM IST
உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கான பெயர்களை இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் இருந்து தேர்ந்தெடுங்கள்.
பீகாரில் ஆண் குழந்தைகளுக்கு பரவலாக வைக்கப்படும் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பீகாரில் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியம் அதிகம் பின்பற்றப்படும். இங்கு குழந்தைகளுக்கு தெய்வீக மணம் கமழும் பெயர்களை வைக்கும் பழக்கம் பாரம்பரியமாகக் கடைபிக்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு பலம், தெய்வீகம், இயற்கை, புனித வாசங்கள் போன்ற அர்த்தங்களை பிரதிபலிக்கும் பெயர்கள் வேண்டுமென்றால், நீங்கள் இந்தப்பெயர்களை தேர்ந்தெடுக்கலாம். பீகாரி பெயர்கள் முக்கியத்துவம் பெற்றவை. உங்களுக்கு இங்கு 10 அர்த்தமுள்ள ஆண் குழந்தைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தெய்வீக மணம் வீசும் பெயர்கள். உங்கள் குழந்தைகளுக்கு வைத்து உங்கள் வீட்டை ஆன்மீக ஆற்றல் நிறைந்ததாக்குங்கள்.
அர்ஜுன்
அர்ஜுன் என்ற பெயர் மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயராகும். இவர் பாண்டவ இளவரசன் ஆவார். பஞ்ச பாண்டவர்களில் ஒருவர். இவர் ஒரு ஹீரோ. இவர் தர்மத்தை எவ்வித சஞ்சலமுமின்றி பின்பற்றியவர். இவர் வில்வித்தைகளில் சிறந்தவர். இந்தப்பெயர் பலம், ஆற்றல், தூய்மை, நீதி, நேர்மை ஆகிய அர்த்தங்களைக் குறிக்கும் பெயராகும்.
யஷ்வர்தன்
இந்தப் பெயர் வெற்றி, பெருமை மற்றும் ஆன்மீக செல்வம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இது உங்கள் வீட்டுக்கு புகழைக் கொண்டுவரும் நபர் என்பதைக் குறிக்கும். இந்தப்பெயரைக் கொண்டவர்கள் புகழை அடைவார்கள் என்பது இதன் பொருள். அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும் இவர்களால் புகழ் கிடைக்கும் என்பதாகும். இது அவர்களின் ஆன்மீக குணத்தையும் அதிகரிக்கும்.
கேஷவ்
கேஷவ் என்பது விஷ்ணுவின் மற்றொரு பெயர். இவர் காக்கும் கடவுள், உலகை காப்பவர். இந்தப்பெயர் தெய்வீகம், பாதுகாப்பு மற்றும் நீதி, நேர்மை ஆகியவற்றைக் குறிக்கும்.
ஆதிஷ்
ஆதிஷ் என்றால், ஆன்மீக அர்த்தம் நிறைந்தது என்று பொருள். முதலுமானவர், துவக்கமுமானவர் மற்றும் உச்ச கடவுள் என்று பொருள். இந்தப்பெயர் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பெயராகும். இந்தப்பெயருக்கு அதிக சக்தி உண்டு. இது சக்திவாய்ந்த நபர், துவக்கம் என்ற அர்த்தங்களைக் குறிக்கும்.
பிரணவ்
பிரணவ் என்பது ஓம் எனும் புனித மந்திரத்தின் அர்த்தமாகும். ஓம் என்பதில் இருந்துதான் உலகம் துவங்கியது. அதுவே பாதுகாக்கிறது. அதுவே அழிக்கவும் செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பெயருக்கு ஆழ்ந்த தெய்வீக சக்தி உண்டு. இது ஆன்மீக தொடர்புடையவர் என்பதைக் குறிக்கிறது. இது பிரபஞ்சத்தின் சக்தியுடன தொடர்புடையது.
விஷால்
விஷால் என்றால் உயரிய மற்றும் விலை மதிப்புமிக்க என்று பொருள். இது ஆன்மீக மணம் கமழும் பெயராகும். இது பரந்த இதயம் கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. இது காதல், அன்பு, ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.
ஷிவான்ஷ்
ஷிவான்ஷ் என்பது சிவனின் மற்றொரு பெயர். மாற்றம், அழிவு, மீட்டுருவாக்கம் என்பது இதன் பிரதான பொருளாகும். இந்தப்பெயர் ஆன்மீக தொடர்புகொண்டது. சிவனின் சக்திவாய்ந்த என்ற அர்த்தத்தைக் கொண்ட பெயர். மாறும் திறன் கொண்டது என்பதைக் குறிக்கிறது. உள அமைதி மற்றும் ஆன்மீக ஒளி என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.
ராகவ்
ராகவ் என்றால் ராமனின் மற்றொரு பெயர். இந்தப் பெயருக்கு அரசன், உண்டை, அன்பு, தர்மம், அறம் என எண்ணற்ற அர்த்தங்கள் இந்து இதிகாசத்தில் உள்ளது. இந்தப்பெயரைக் கொண்டவர்கள் ஒழுகக்சீலர்களாக இருப்பார்கள். நீதி வழுவாமல் நடப்பார்கள். ஆன்மீக நேர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சூர்யான்ஷ்
சூர்யான்ஷ் என்றால் ஒளி, நேர்மறை எண்ணம் மற்றும் ஆற்றல் என்பதைக் குறிக்கும். சூரியனைப் போல் பிரகாசமானவர். இது தெய்வீக ஆற்றலாக பல கலாச்சாரங்களில் கருதப்படுகிறது. இது உங்கள் வீட்டுக்கு இதம் மற்றும் பளபளப்பைக் கொண்டு வருபவர் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது. மற்றவர்கள் வாழ்வில் ஒளி நிரப்புபவர். ஆன்மீன வழிகாட்டியாகவும், அவர்களை உயர்த்துகிறது.
மானவ்
மானவ் என்றால் மனித குணம் கொண்டவர் என்று பொருள். இந்தப்பெயர் அன்பு, இரக்கம், அனுதாபம் மற்றும் புரிதல் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது. இந்தப் பெயர் மனித குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கும் நபர் என்பதைக் குறிக்கிறது.
டாபிக்ஸ்