குழந்தை பெற்றுக் கொள்வது ஒன்றும் புனிதமானது இல்லை.. சர்ச்சையை கிளப்பிய ரஜினியின் கதாநாயகி
தான் இதுவரை குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பியது இல்லை. அது நீங்கள் சொல்லும் அளவிற்கு புனிதமானதும் இல்லை எனக் கூறி நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

குழந்தை பெற்றுக் கொள்ளது ஒன்றும் புனிதமானது இல்லை.. சர்ச்சையை கிளப்பிய ரஜினியின் கதாநாயகி
பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. பின், இவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இவர் முதன் முதலில், வா லைஃப் ஹோ டூ ஏசி(2005) என்னும் இந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். பின், இவர் இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய மொழிப் படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
தமிழ்நாட்டில் பிறந்த ராதிகா ஆப்தே
தமிழ்நாட்டில் பிறந்த ராதிகா ஆப்தே, மராத்திய பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் அதிக ஈடுபடு கொண்டவர். பெண்கள் மேல் நடத்தப்படும் வன்முறை, அடக்குமுறைகள், உறவுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசுபவர்.
