தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mahindra Unveils Five Electric Suv Cars

வருகிறது மஹிந்திரா SUV எலக்ட்ரிக் கார்கள்!

Aug 16, 2022, 02:55 PM IST

மகேந்திரா நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் 5 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.
மகேந்திரா நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் 5 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

மகேந்திரா நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் 5 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் இருக்கும் பிரபலமான கார் நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பல கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் கார் விவரங்களை அறிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cowpeas Rice : தட்டைப்பயிறு சாதம்; சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி!

Empty Stomach: காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.. செரிமானம் முதல் சர்க்கரை வரை!

Chia Seeds Drinks: கோடை கால புத்துணர்ச்சி..! உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் சியா விதைகள் பானங்கள்

Benefits of Peaches: எடை குறைப்பு முதல் கண், சரும் பாதுகாப்பு வரை..! ஏராள நன்மைகளை கொண்டிருக்கும் பீச் பழங்கள்

இந்த கார்கள் எஸ்யூவி மற்றும் பிஇ பிராண்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து எலக்ட்ரிக் கார்களை வரும் 2026க்குள் அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எஸ்யூவி e8, எஸ்யூவி e9, பிஇ 05, பிஇ 07, பிஇ 09 ஆகிய ஐந்து எலக்ட்ரிக் கார்களும் INGLO பிளாட்பார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. அதுவும் வெவ்வேறு பாடி ஸ்டைல்களில் உருவாக்கப்பட இருக்கிறது.

இதன் அம்சங்கள்

  • இந்த கார்கள் 80 கிலோ வாட் ஹவர் வரை பேட்டரிகளை சப்போர்ட் செய்யக்கூடிய திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த காரை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் 85 விழுக்காடு முழுமையாகி விடும். ஏனென்றால் இதில் 175 கிலோ வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த கார்கள் மற்ற எஸ்யூவி கார்களைப் போல் அல்லாமல் பிஇ 07 மாடலில் வித்தியாசமான முறையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஓடிஏ அப்டேட்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேக்கள், 12.3 இன்ச் அளவில் மூன்று ஸ்கிரீன்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.
  • இதில் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டெயில் லேம்ப்கள், பிளாட் ரூப்லைன், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள் போன்றவை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த கார்களில் பிஇ 07 கார் வரும் 2026 அக்டோபர் மாதம் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.