தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chia Seeds Drinks: கோடை கால புத்துணர்ச்சி..! உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் சியா விதைகள் பானங்கள்

Chia Seeds Drinks: கோடை கால புத்துணர்ச்சி..! உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் சியா விதைகள் பானங்கள்

May 02, 2024, 05:59 PM IST

கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளும் பானங்களில் ஒன்றாக சியா விதைகள் பானம் இருந்து வருகிறது. சியா விதைகளை வைத்து என்னென்ன பானங்கள் தயார் செய்து பருகலாம் என்பதை தெரிந்து கொள்வோம்
கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளும் பானங்களில் ஒன்றாக சியா விதைகள் பானம் இருந்து வருகிறது. சியா விதைகளை வைத்து என்னென்ன பானங்கள் தயார் செய்து பருகலாம் என்பதை தெரிந்து கொள்வோம்

கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளும் பானங்களில் ஒன்றாக சியா விதைகள் பானம் இருந்து வருகிறது. சியா விதைகளை வைத்து என்னென்ன பானங்கள் தயார் செய்து பருகலாம் என்பதை தெரிந்து கொள்வோம்

பிட்னஸ் உலகில் பொதுவானதாக இருந்து வருகிறது சியா விதைகள் ஸ்மூத்தி, புட்டிங் மற்றும் வேகவைத்த உணவு பொருள்களில் சியா விதைகளை சேர்த்து எடுத்து கொள்ளலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Healthy Seeds: நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம்! கோடை காலத்தில் உணவில் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டிய விதைகள் இதோ

Covaxin: ‘கோவாக்சின் தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு..’-ஆய்வில் வெளியான பகீர் தகவல்

ICMR: ஒரு முறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

Bad Food Combinations: கவனம் மக்களே.. ஆயுர்வேதத்தின் படி பிரச்சனைகக்குரிய சாப்பிடக்கூடாத உணவு சேர்க்கைகள் இதோ!

உடல் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் இருக்க, உங்கள் கோடைகால பானமாக சியா விதைகளை பயன்படுத்தி பல்வேறு பானங்கள் தயார் செய்து பருகலாம். சியா விதைகளை தண்ணீர் அல்லது பிற ஆரோக்கியமான பொருள்களில் சேர்க்க பல சுவாரஸ்யமான வழிகள் உள்ளன. உடலுக்கு ஆரோக்கியமான சியா விதை பான ரெசிபிகளை தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி அவற்றின் அளவை 10-12 மடங்கு வரை அதிகரிக்க செய்யும். அவை உடலில் திரவத்தை உறிஞ்சி, வயிற்றில் ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இந்த ஜெல் தண்ணீரை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது. இதனால் நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கூடுதலாக, சியா விதைகளில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது, மேலும் நீரேற்றத்துகக்கும் உதவுகிறது.

சியா விதைகளில் தயார் செய்யக்கூடிய பானங்கள்

சியா ஃப்ரெஸ்கா

தேவையான பொருள்கள்

சியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

தேன் அல்லது மேப்பிள் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை, ஒரு கப் தண்ணீர், ஒரு எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் அல்லது மேப்பிள் சிரப் ஆகியவற்றை கலக்கவும். விதைகள் வீங்கும் வரை 10 நிமிடங்கள் ஊற வைத்துப பின்னர் இந்த பானத்தை பருகலாம்

பழம் கலந்த சியா நீர்

தேவையான பொருட்கள்

சியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

ஸ்ட்ராபெர்ரி - ஒரு கைப்பிடி

ஆரஞ்சு - ஒரு கைப்பிடி

வெள்ளரி - ஒரு கைப்பிடி

செய்முறை

ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை, ஒரு கப் தண்ணீர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு அல்லது வெள்ளரிகள் போன்ற துண்டுகளாக்கப்பட்ட பழங்களை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த பானம் புத்துணர்ச்சி பெறுவதற்காக பிரிட்ஜில் சில மணிநேரம் வைத்து விட்டு பருகலாம்.

தேங்காய் சியா தண்ணீர்

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

சியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் தண்ணீர் - 1 கப்

ஒரு டேபிள்ஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தேங்காய் நீரில் கலக்கவும். விதைகள் திரவத்தை உறிஞ்சும் வரை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதன் பின்னர் அதை நன்கு கிளறி, நீரேற்றம் செய்யும் தேங்காய் சியா விதைகள் பானத்தை பருகலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி