ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.. பூஜையின் சிறப்பு.. பூஜைக்கு உகந்த நல்ல நேரம்.. எமகண்டம்..குறித்த முக்கிய தகவல்கள் இதோ!
ஞாயிற்றுக்கிழமையில் நவகிரக நாயகனான சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால் ஞாயிற்று கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சூரிய தோஷம் விலகும். நம் வாழ்வில் தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.
இன்று 2024 அக்டோபர் மாதம் 6 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இன்று காலை, மாலை நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பார்க்கலாம். மேலும் இன்று எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு உகந்த தெய்வங்கள் எவை. தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமையில் நவகிரக நாயகனான சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால் ஞாயிற்று கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சூரிய தோஷம் விலகும். நம் வாழ்வில் தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : புரட்டாசி மாதம்
தேதி: 20
கிழமை : ஞாயிறு
பிறை : வளர்பிறை
திதி : திரிதியை
நேரம் : காலை 6 மணி 04 நிமிடம் வரை பின்பு : சதுர்த்தி
நட்சத்திரம் : இன்று விசாகம் இரவு 11 மணி 03 நிமிடம் வரை பின்பு அனுஷம்
சூரிய உதயம்
காலை : 6 மணி 02 நிமிடம்
நல்ல நேரம்
காலை : 7 மணி 45 நிமிடம் முதல் 8 மணி 45 நிமிடம் வரை
மாலை : 3 மணி 15 நிமிடம் முதல் 4 மணி 15 நிமிடம் வரை
நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்
ராகுகாலம் : மாலை 4 மணி 30 நிமிடம் முதல் 6 மணி வரை
குளிகை : பிற்பகல் 3 மணி முதல் 4 மணி 30 நிமிடம் வரை
எமகண்டம் : பிற்பகல்12 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரை
இன்றைய சிறப்பு விஷேசங்கள்.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்தில் இரவு முத்துப்பந்தலருளிய காட்சி
ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு வழிபாடு
ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பூஜைக்கு மிகவும் உகந்தது. ஞாயிற்றுக்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். அதுமட்டும் இல்லாமல் மகா விஷ்ணுக்கும் மிகவும் உகந்த நாள். சூரிய பகவானின் வழிபாடு பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. அவர் கல்விக்கு உரிய தெய்வமாகவும் விளங்குகிறார். இதனால் ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் ஞாயிற்றுக்கிழமை செய்யும் தியானம் என்பது மிகவும் நல்லது. அதேபோல் ஞாயிறன்று பசு, எறும்பு, புறா, நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிக்கலாம்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலம் கால பைரவர், காளி, சர்வேஷ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட உகந்த நேரம். அந்த நேரத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது விஷேசம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்