தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முகத்தின் குழிகள் மற்றும் தழும்புகள்! உடனே குறைக்க இந்த பொருட்களே போதுமே! இப்பவே ட்ரை பண்ணி பார்க்கலாமே!

முகத்தின் குழிகள் மற்றும் தழும்புகள்! உடனே குறைக்க இந்த பொருட்களே போதுமே! இப்பவே ட்ரை பண்ணி பார்க்கலாமே!

Suguna Devi P HT Tamil

Nov 24, 2024, 05:32 PM IST

google News
மாறிவரும் வாழ்க்கை நிலை, புது விதமான உணவு பழக்க வழக்கங்கள் என பல காரணங்களினால் நமது உடலின் ஆரோக்கியம் கெடுவதைப் போலவே முகத்தின் ஆரோக்கியமும் பாழாகிறது. இது போன்ற நிலைமைகளில் முகத்தில் தோன்றும் முதல் பிரச்சனை முகப்பரு ஆகும். (Medical News Today )
மாறிவரும் வாழ்க்கை நிலை, புது விதமான உணவு பழக்க வழக்கங்கள் என பல காரணங்களினால் நமது உடலின் ஆரோக்கியம் கெடுவதைப் போலவே முகத்தின் ஆரோக்கியமும் பாழாகிறது. இது போன்ற நிலைமைகளில் முகத்தில் தோன்றும் முதல் பிரச்சனை முகப்பரு ஆகும்.

மாறிவரும் வாழ்க்கை நிலை, புது விதமான உணவு பழக்க வழக்கங்கள் என பல காரணங்களினால் நமது உடலின் ஆரோக்கியம் கெடுவதைப் போலவே முகத்தின் ஆரோக்கியமும் பாழாகிறது. இது போன்ற நிலைமைகளில் முகத்தில் தோன்றும் முதல் பிரச்சனை முகப்பரு ஆகும்.

மாறிவரும் வாழ்க்கை நிலை, புது விதமான உணவு பழக்க வழக்கங்கள் என பல காரணங்களினால் நமது உடலின் ஆரோக்கியம் கெடுவதைப் போலவே முகத்தின் ஆரோக்கியமும் பாழாகிறது. இது போன்ற நிலைமைகளில் முகத்தில் தோன்றும் முதல் பிரச்சனை முகப்பரு ஆகும். இந்த முகப்பருவை குணப்படுத்த பல வீட்டு பொருட்களே போதுமானதாக இருக்கும். ஒருவரது முகத்தை உவமை படுத்த வேண்டுமென்றால் கூட நிலவை ஒப்பீடு செய்வது உண்டு. இத்தனை அழகுக்கு இன்னொரு பெயரான சந்திரனில் கூட பல குழிகள் உண்டு. 

முகப்பரு மற்றும் பிற போன்றவற்றின் காரணமாக நமது முகத்திலும் இது போன்ற குழிகள் ஏற்படுகின்றன. பருக்கள் மற்றும் தழும்புகள் இல்லாத சருமத்தை விரும்பாதவர்கள் குறைவு. முகப்பரு வந்து போன பிறகும், அதன் தழும்புகள் மற்றும் துளைகள் முகத்தில் இருக்கும். ஆனால் இனி அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களை கேலி செய்த அதே ஆட்கள் இங்கு வந்து புள்ளிகளை மாற்றியதன் ரகசியத்தை உங்களிடம் கேட்பார்கள். அதற்கான சில குறிப்புகள் மற்றும் வழிகளைப் பார்ப்போம்

தேன் 

தேன் சருமத்திற்கு சிறந்த பொருளாக பயன்படுகிறது. தேனில் பல நன்மைகள் உள்ளன. தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாகும், இது சருமத்தை எண்ணெயாக மாற்றாமல் ஈரப்பதமாக்குகிறது. தேனை நேரடியாக முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்தால் தழும்புகள் நீங்கும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் துளைகளின் தோற்றத்தைக் குறைக்கலாம். 

கடற்பாசி

கடற்பாசி சருமத்தை மென்மையாக்கவும், அழுக்குகளை அகற்றவும் சிறந்த வழியாகும். கடற்பாசி சருமத்திற்கு சிறந்த எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது . இதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். அதை உங்கள் முகத்தில் தடவி உலர விடவும். 20 நிமிடம் கழித்து கழுவவும். இது சருமத்துளைகளின் அளவைக் குறைத்து, சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது. இதன் வாயிலாக முகத்தின் பொலிவும் கூடுகிறது. 

தக்காளிச் சாறு 

தோலைப் பாதுகாக்கவும், சிறந்த பலனைத் தரவும் பழங்காலத்திலிருந்தே நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. தக்காளியில் லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தக்காளி கூழ் முகத்தில் தடவுவது துளைகளை திறக்க உதவுகிறது. அதை தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் அதை கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு தினமும் இதைச் செய்யுங்கள். மாற்றத்தைக் காணலாம்.

இவை அனைத்தையும் தொடர்ந்து உங்கள் முகத்தில் பயன்படுத்தி வர தெளிவான மாற்றங்களை உங்களால் காணமுடியும். நீங்களும் இதனை ட்ரை செய்து பார்த்து ரிசல்ட்டை பாருங்கள். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி