பப்பாளியை உங்கள் சருமத்தில் நேரடியாக பயன்படுத்துவதால் நிகழும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 23, 2024

Hindustan Times
Tamil

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்துக்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது பப்பாளி

பப்பாளி உங்கள் சருமத்தை பொலிவு அடைய செய்வதுடன், முகத்தை பளபளப்பாக்குகிறது

பப்பாளியில் இருக்கும் நொதிகள் புரதத்தை உடைத்து, முகப்பருக்களை குறைப்பதுடன், அழுக்குகள் உரித்தலை மேம்படுத்துகிறது. சருமத்தில் இறந்த செல்களை நீக்கி, துளைகளை தடுக்கிறது

பப்பாளியில் இருக்கும் லைக்கோபீன் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு வயது முதிர்வு தோற்றத்தை தடுக்கிறது. ப்ரீ ரேடிக்கல்களால் சருமம் சேதமடைவதற்கு எதிராக போராடுகிறது

பப்பாளியில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து சருமத்தை நீரேற்றமாக வைத்து ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது

சருமத்தின் உள்ளே ஊடுறுவி அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குகிறது. இதனால் சருமம் பளபளப்பை பெறுகிறது

பப்பாளி ஃபேஸ் பேக்கில் இடம்பிடித்திருக்கும் நொதிகள் சருமத்தில் இருக்கும் முடிகளை நீக்கி, இயற்கையான பிளீச்சாக செயல்படுகிறது. அத்துடன் சருமத்தில் முடி மீண்டும் வளர்வதை தடுக்கிறது 

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!