தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெஜிடபிள் பிரியாணியை இப்படி செஞ்சு பாருங்க! மீதம் வைக்கவே மாட்டாங்க! ஈசி ரெசிபி உள்ளே!

வெஜிடபிள் பிரியாணியை இப்படி செஞ்சு பாருங்க! மீதம் வைக்கவே மாட்டாங்க! ஈசி ரெசிபி உள்ளே!

Suguna Devi P HT Tamil

Nov 02, 2024, 03:09 PM IST

google News
குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து விடும் போதெல்லாம் பல சமயங்களில் சாப்பிடாமல் அப்படியே கொண்டு வருவார்கள். அவர்கள் மிச்சம் வைக்காமல் அப்படியே சாப்பிடும் முறையில் எளிமையாக வெஜிடபிள் பிரியாணி செய்யலாம்.
குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து விடும் போதெல்லாம் பல சமயங்களில் சாப்பிடாமல் அப்படியே கொண்டு வருவார்கள். அவர்கள் மிச்சம் வைக்காமல் அப்படியே சாப்பிடும் முறையில் எளிமையாக வெஜிடபிள் பிரியாணி செய்யலாம்.

குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து விடும் போதெல்லாம் பல சமயங்களில் சாப்பிடாமல் அப்படியே கொண்டு வருவார்கள். அவர்கள் மிச்சம் வைக்காமல் அப்படியே சாப்பிடும் முறையில் எளிமையாக வெஜிடபிள் பிரியாணி செய்யலாம்.

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து விடும் போதெல்லாம் பல சமயங்களில் சாப்பிடாமல் அப்படியே கொண்டு வருவார்கள். அவர்கள் மிச்சம் வைக்காமல் அப்படியே சாப்பிடும் முறையில் எளிமையாக வெஜிடபிள் பிரியாணி செய்யலாம். அதனை செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

தேவையான பொருட்கள்

அரை கிலோ  பாசுமதி அரிசி

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

2 கேரட்

100 கிராம் பீன்ஸ்

காலிஃப்ளவர்

1 உருளைக்கிழங்கு

சிறிதளவு பச்சை பட்டாணி

சிறிதளவு கப் தயிர்

2 பச்சை மிளகாய்

3 பல் பூண்டு

சிறிதளவு இஞ்சி 

அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா

2 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்

2 பிரியாணி இலை

1 துண்டு பட்டை

3 ஏலக்காய்

3 கிராம்பு

1 நட்சத்திர பூ

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு நெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

சிறிதளவு புதினா

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி சூடாக்கவும்.  நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை வதக்கவும்.  பிறகு அதில்நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். இப்பொழுது அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் நறுக்கிய தக்காளியை போட்டு அதை வேக விடவும். பிறகு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு வேக விடவும்.

பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை கிளறவும். மேலும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினாவை போட்டு பின் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.தற்போது ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் போடவும். குறைந்தபட்சம் 3 முதல் 5 விசில் விட வேண்டும். பின்னர் குக்கரை அப்படியே சிறிது நேரம் வைத்து அதன் பின் திறந்து சாப்பிடவும். உதிரி உதிரியாகவும் நீண்ட நேரம் நன்றாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி