தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Idf: காசாவில் இந்திய பாசுமதி அரிசி பையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு

IDF: காசாவில் இந்திய பாசுமதி அரிசி பையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு

Nov 15, 2023 11:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 15, 2023 11:56 PM IST
  • காசாவில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களின் மறைவிடத்தில் இருந்து இந்திய பாசுமதி அரிசி என்று குறியிடப்பட்ட பையில் இருந்து தோட்டாக்கள், ஆயுதங்கள் மீட்டெடுத்த விடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவை சேர்ந்த பை எப்படி அங்கு சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை என கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 7 முதல் நடந்து வரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலிய படைகளின் முற்றுகைக்கு உட்பட்ட காசா மக்களுக்கு இந்தியா சமீபத்தில் மனிதாபிமான உதவியை அனுப்பியது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட பசுமதி அரிசி பையலிருந்து ஆயுதங்கள் மட்டுமில்லாமல் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டது. ஹமாஸ் படையினிரிடம் இந்தியர்களுக்கு எந்த தொடர்பும் இல்லாத போதிலும், இந்தியர்கள் சார்பில் அளிக்கப்பட்ட உதவி ஹாமஸ் படையினரிடம் சென்றடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடை காசா பகுதியில் ஹமாஸ் கட்டுப்பாடில் இருந்த கவுர்னர் இல்லம், காவல்துறை தலைமையகம் உள்பட பல்வேறு பகுதிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை கைப்பற்றியுள்ளது.
More